இன்டெல் ஏ-44 ஸ்மார்ட்போன் அறிமுகம்

இன்டெல் நிறுவனத்தின் புதிய வரவு இன்டெல் ஏ-44 ஸ்மார்ட்போன்.

Update: 2018-11-28 09:43 GMT
கம்ப்யூட்டர் சிப் உள்ளிட்ட நுட்பமான ஹார்ட்வேர் தயாரிப்பில் முன்னணியில் உள்ள இன்டெல் நிறுவனத்தின் புதிய வரவு இன்டெல் ஏ-44 என்ற பெயரிலான ஸ்மார்ட்போன். இதில் 4,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது. மேலும் இரண்டு கேமரா கொண்டதாக வந்துள்ளது.

பட்ஜெட் போனான இதில் பேஸ் அன்லாக் (முகம் பார்த்து திறக்கும்) வசதி உள்ளது. இதில் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியா (கோ எடிஷன்) உள்ளது. இதில் 512 எம்.பி. ரேம் உள்ளது. இதன் விலை ரூ.5,999 ஆகும்.

100 நாள் திரும்பப் பெறும் வசதியையும் இந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அளித்துள்ளது. நீலம், பொன்னிறம், கரும் சாம்பல் உள்ளிட்ட நிறங்களில் இது வந்துள்ளது. இதில் இரண்டு சிம் பயன்படுத்தும் வாய்ப்பும் உள்ளது.

பின்புற கேமராக்களில் ஒன்று 5 மெகா பிக்ஸெலுடனும், மற்றொன்று 3 மெகா பிக்ஸெல்லுடனும் வந்துள்ளது. முன்புறத்தில் 2 மெகா பிக்ஸெலுடன் பிளாஷ் வசதியோடு வந்திருப்பதால் செல்பி எடுக்க சிறந்தது.

இதில் 8 ஜி.பி. நினைவக வசதி உள்ளது. இதில் மைக்ரோ எஸ்.டி. கார்டு போடும் வசதியும் உள்ளதால் 32 ஜி.பி. வரை விரிவாக்கம் செய்து கொள்ள முடியும். இதில் உள்ள பேட்டரி 3 நாட்கள் வரை தாக்குப் பிடிக்கும்.

மேலும் செய்திகள்