ஹேண்ட் பிளண்டர்

சமையலறை சாதனங்களில் மிகவும் முக்கியமானது பிளண்டர்.

Update: 2018-11-28 08:10 GMT
முட்டையை ஆம்லெட் ஆக்கவும், தயிரை மோராக்கவும், நுரை பொங்கும் குளிர் காபி தயாரிக்கவும் பிளண்டர் அவசியம். பேட்டரியில் இயங்கும் இந்த பிளண்டர் மிகவும் கையடக்கமானது. இதில் இரண்டு 1.5 வோல்ட் பேட்டரி போட்டால் போதும். பொருட்களை கலக்க உதவும் பகுதி எவர்சில்வராலும், கைப்பிடி உறுதியான பிளாஸ்டிக்கினாலும் ஆனது. திரவ பொருட்களை கலக்குவதற்கு மிகவும் உதவியானது.

இது எடை குறைவானது. சுற்றுலாப் பயணத்தின்போதும் இதை கையோடு எடுத்துச் செல்லலாம். இந்த ஹேண்ட் பிளண்டர் விலை ரூ.229.

மேலும் செய்திகள்