வாட்ஸ்-அப்பில் பெண்ணுக்கு ஆபாச படங்கள் அனுப்பியவர் கைது

வாட்ஸ்-அப்பில் பெண்ணுக்கு ஆபாச படங்கள் அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-11-26 22:45 GMT
மும்பை,

மும்பை மாட்டுங்காவை சேர்ந்த 44 வயது பெண் ஒருவரின் வாட்ஸ்-அப்புக்கு கடந்த சில நாட்களாக அடையாளம் தெரியாத செல்போன் நம்பரில் இருந்து ஆபாச படங்கள் வந்தன.

இதைப்பார்த்து அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அந்த பெண் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இதில், அந்த நம்பர் மேற்குவங்கத்தில் வாங்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, பெண்ணுக்கு ஆபாச படங்கள் அனுப்பிய வாலிபரை பிடிக்க போலீசார் மேற்கு வங்கம் செல்ல திட்டமிட்டனர்.

இந்தநிலையில், அந்த செல்போன் நம்பர் மும்பையில் பயன்படுத்தப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த நம்பரை பயன்படுத்தி வந்த முஸ்தாக் அலி சேக்(வயது24) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், அவர் ஆபாச படங்களை பகிர்வதற்கு என்று வாட்ஸ்-அப்பில் தனி குரூப் உருவாக்கி இருந்தது தெரியவந்தது. இருப்பினும் தனது குரூப்பில் அந்த பெண்ணின் நம்பர் தவறுதலாக சேர்ந்து விட்டதாகவும், வேண்டுமென்றே அவருக்கு ஆபாச படங்கள் அனுப்பவில்லை என்றும் அவர் போலீசாரிடம் கூறினார்.

மேலும் செய்திகள்