சென்னை கொரட்டூரில் சொத்து தகராறில் முதியவர் அடித்து கொலை; பேரன் கைது
கொரட்டூரில் சொத்து தகராறில் முதியவரை அடித்து கொலை செய்த பேரனை போலீசார் கைது செய்தனர்.
அம்பத்தூர்,
சென்னை கொரட்டூர், அக்ரஹாரம் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் துரை (வயது 74). இவருக்கு வேணுகோபால் (51), குணசேகரன் (48) என்ற 2 மகன்கள் உள்ளனர். துரைக்கு அதே பகுதியில் 6200 சதுரஅடி வீட்டு மனை உள்ளது. இதை 3 பாகமாக பிரித்து இரண்டு பாகத்தை மகன்களுக்கும், ஒரு பாகத்தை தனக்கும் வைத்துக்கொண்டார்.
இந்த பாகப்பிரிவினை 10 நாட்களுக்கு முன்பு நடந்துள்ளது. வேணுகோபால் தனது மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். வேணுகோபாலின் மனைவி ஆட்டோ டிரைவரான தனது மகன் பொற்செல்வன் (21) என்பவருடன் கொரட்டூர் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருகிறார். அவர்கள் வசித்துவரும் வீடு அம்மா வழி தாத்தாவின் வீடு என தெரிகிறது.
இந்நிலையில் நேற்று காலை 11 மணிக்கு பொற்செல்வன் தனது தந்தை வேணுகோபாலுக்கு பிரித்துக்கொடுத்த இடத்தில் குடிசை கட்டுவதற்காக வந்தார். அப்போது அங்கு இருந்த துரை, பேரனிடம் நீ தான் உனது அம்மாவோடு சென்றுவிட்டாயே, இங்கு ஏன் வந்தாய் என்று கேட்டு தகராறு செய்தார்.
இதனால் வாக்குவாதம் முற்றிய பொற்செல்வன் துரையை காலில் இருந்த செருப்பாலும், கைகளாலும் அடித்ததாக தெரிகிறது. இதுகுறித்து அங்கிருந்தவர்கள் கொரட்டூர் போலீசாருக்கு தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்துக்கொண்டிருந்தபோது மனமுடைந்த துரை அந்த இடத்திலேயே மயங்கி விழுந்து இறந்துவிட்டார்.
தனது பேரனே தன்னை செருப்பால் அடித்துவிட்டானே என்று புலம்பிக்கொண்டே இருந்த அவர் மயங்கி விழுந்து இறந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பொற்செல்வனை போலீசார் கைது செய்தனர்.