செம்மஞ்சேரியில் கோர்ட்டு விசாரணைக்கு பயந்து கொலை குற்றவாளி தற்கொலை

செம்மஞ்சேரியில் கோர்ட்டு விசாரணைக்கு பயந்து கொலை வழக்கு குற்றவாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-11-26 23:00 GMT
சோழிங்கநல்லூர்,

சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் வசித்து வந்தவர் செல்வம்(வயது 27). பெயிண்டர். இவருடைய மனைவி சத்யா. இவர்களுக்கு திருமணமாகி 6 மாதங்களே ஆகிறது.

செம்மஞ்சேரியில் 7 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் செல்வம் 4-வது குற்றவாளி ஆவார். இந்த வழக்கு விசாரணை செங்கல்பட்டு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு விசாரணை இறுதிகட்டத்தை அடைந்து விட்டதால் கோர்ட்டு என்ன தண்டனை வழங்குமோ? என செல்வம் பயந்தபடி இருந்தார். நேற்று முன்தினம் இரவு திடீரென செல்வம், தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த செம்மஞ்சேரி போலீசார், தற்கொலை செய்த செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டு விசாரணைக்கு பயந்து செல்வம் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்