விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பயிற்சிப்பணி
விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் தற்போது அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் கீழ் செயல்படும் விண்வெளி ஆய்வு மையங்களில் ஒன்று விக்ரம் சாராபாய் விண்வெளி மையம். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செயல்படும் இந்த நிறுவனத்தில் தற்போது அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.
மொத்தம் 173 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிரிவு வாாியாக உள்ள பணியிட விவரம் : ஏரோநாட்டிக்கல், - 15. கெமிக்கல் - 10, சிவில் - 12, எலக்ட்ரிக்கல் 12, எலக்ட்ரானிக்ஸ் 40, மெக்கானிக்கல் - 40, மெட்டலர்ஜி - 6, புரோடக்சன் - 6, லைபிரரி அண்ட் இன்பர்மேசன் சயின்ஸ் - 8, கேட்டரிங், ஓட்டல் மேனேஜ்மென்ட் - 4 .
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 14-12-2018-ந் தேதியில் 30 வயதுக்கு உடப்ட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினர் 33 வயதுக்கு உட்பட்டவர்களும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 35 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள் உள்ள பிரிவில் என்ஜினீயரிங் பட்டப்படிப்பை முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், லைபிரரி சயின்ஸ் பட்டப்படிப்பு, கேட்டரிங், ஓட்டல் மேனேஜ்மென்ட் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கும் பணிகள் உள்ளன.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கான நேரடி நேர்காணலில் பங்கேற்கலாம். என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு 30-11-2018-ந் தேதியும், லைபிரரி சயின்ஸ், ஓட்டல்மேனேஜ்மென்ட் படித்தவர்களுக்கு 1-12-2018-ந் தேதியும் நேர்காணல் நடக்கிறது.
விருப்பமுள்ளவர்கள் www.sdcentre.org மற்றும் mhr.nats.gov.in என்ற இணையதளத்தில் பெயரை பதிவு செய்துவிட்டு தேவையான சான்றுகளுடன் நேர்காணலில் பங்கேற்கலாம். விரிவான விவரங்களையும் மேற்குறிப்பிடட்ட இணையதளத்தில் பார்க்கலாம்.