விமான நிலைய கடையில் பெண் ஊழியரை ஆபாசமாக வர்ணித்த வாலிபர் கைது

விமான நிலைய கடையில் பெண் ஊழியரை ஆபாசமாக வர்ணித்தவாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-11-25 23:15 GMT
மும்பை,

விமான நிலைய கடையில் பெண் ஊழியரை ஆபாசமாக வர்ணித்தவாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஆபாச வர்ணனை

மும்பை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து சம்பவத்தன்று இரவு ஆந்திர மாநிலம் ஐதராபாத் செல்லும் விமானத்தில் பயணிக்க வாலிபர் ஒருவர் வந்தார். விமான நிலையத்தில் உள்ள கடையில் அந்த வாலிபர் பொருள் வாங்குவதற்காக சென்றார்.

இதில், அந்த கடையில் இருந்த 31 வயது பெண் அவரிடம் பொருட்களை காண்பித்து கொண்டு இருந்தார். அப்போது வாலிபர் பெண் ஊழியரை பார்த்து அவரின் உடலமைப்பு குறித்து ஆபாசமாக வர்ணித்து உள்ளார்.

வாலிபர் கைது

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெண் ஊழியர் இதுபற்றி அங்கு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரிடம் புகார் தெரிவித்தார். உடனே அவர் அந்த வாலிபரை பிடித்து சகார் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.

விசாரணையில் அவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சோகேல் அகமது(வயது24) என்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் பற்றி பெண் ஊழியர் கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்