நடிகர் அம்பரீஷ் மறைவுக்கு இரங்கல் ‘நான் என்னுடைய சிறந்த நண்பனை இழந்துவிட்டேன்’ சபாநாயகர் ரமேஷ்குமார் உருக்கம்
நடிகர் அம்பரீசின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள சபாநாயகர் ரமேஷ்குமார், ‘நான் என்னுடைய சிறந்த நண்பனை இழந்துவிட்டேன்’ என்று உருக்கமாக கூறினார்.
கோலார் தங்கவயல்,
நடிகர் அம்பரீசின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள சபாநாயகர் ரமேஷ்குமார், ‘நான் என்னுடைய சிறந்த நண்பனை இழந்துவிட்டேன்’ என்று உருக்கமாக கூறினார்.
அம்பரீசுக்கு இரங்கல்
பிரபல நடிகரும், முன்னாள் மந்திரியுமான அம்பரீஷ் நேற்று முன்தினம் மரணமடைந்தார். அவருக்கு அரசியல்வாதிகள் உள்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்ற னர். இந்த நிலையில், நடிகர் அம்பரீசின் மறைவுக்கு கோலார் மாவட்டம் சீனிவாசப்பூரில் சபாநாயகர் ரமேஷ்குமார் இரங்கல் தெரிவித்தார். அவருடைய படத்திற்கு ரமேஷ்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சிறந்த நண்பனை...
நானும், அம்பரீசும் சிறந்த நண்பர்களாக இருந்தோம். நான் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது, அம்பரீஷ் வீட்டு வசதித்துறை மந்திரியாக இருந்தார். அப்போது நான், சீனிவாசப்பூர் தாலுகாவில் வீடு இல்லாத மக்களுக்கு வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அவர், சித்தராமையாவிடம் அனுமதி வாங்கி, சீனிவாசப்பூரில் 19 ஆயிரம் வீடுகள் கட்ட உத்தரவிட்டார். அந்த பணிகள் தற்போது 90 சதவீதம் முடிந்துவிட்டது.
மாநிலம் முழுவதும் அவருடைய துறை மூலம் பல லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. அவருடைய மறைவு கர்நாடகத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும். நான் என்னுடைய சிறந்த நண்பனை இழந்துவிட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.