அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்த பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு தினத்தந்தி வழங்கும் ‘கல்வி நிதி’ கலெக்டர் மு.விஜயலட்சுமி நாளை வழங்குகிறார்

தினத்தந்தி வழங்கும் ‘கல்வி நிதி’ பெற தகுதி பெற்றுள்ள அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்த பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய 20 மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கும் விழா நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. விழாவில் அரியலூர் மாவட்ட கலெக்டர் மு. விஜயலட்சுமி கல்வி நிதியை வழங்குகிறார்.;

Update: 2018-11-25 23:00 GMT
அரியலூர், 

கல்விப்பணியில் பல புரட்சிகளை செய்து மாணவர்களுக்கு வழிகாட்டி வரும் தினத்தந்தி சார்பில் மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என்பதற்காக எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெறும் மாணவ- மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டு வந்தது.

மேலும் மாணவர் பரிசு திட்டத்தின்படி மாவட்டந் தோறும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகள் அனைவருக்கும் ரொக்கப்பரிசு மற்றும் தினத்தந்தியின் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.


2014-15-ம் கல்வி ஆண்டு முதல் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் அதிக மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்று பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்கள் மேற்படிப்பை தொடர்வதற்கு வசதியாக தினத்தந்தி கல்வி நிதி திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் மாவட்டத்துக்கு 10 மாணவ- மாணவிகள் வீதம் தமிழகம், புதுச்சேரியில் 340 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.34 லட்சம் பரிசு பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி 2017-18 கல்வி ஆண்டில் அரியலூர் மாவட்டத்தில் தலா ரூ.10 ஆயிரம் ‘தினத்தந்தி’ கல்வி நிதி பெற தகுதி பெற்றுள்ள 10 மாணவ- மாணவிகள் பெயர் விவரம் வருமாறு:-

1) ஆர்.அபிநயா, அரசு மேல்நிலைப்பள்ளி, உட்கோட்டை.

2) எஸ். ஜெயப்பிரியா, நிர்மலா பெண்கள் மேல் நிலைப்பள்ளி, அரியலூர்.

3) இ.கவிமுகில், அரசு மேல்நிலைப்பள்ளி, பரணம்.

4) சி. கார்த்திகாயினி, அரசு மேல்நிலைப்பள்ளி, உதய நத்தம்.

5) எஸ்.நிவேதா, அரசு மேல்நிலைப்பள்ளி, உட்கோட்டை.

6) ஆர். ரம்யா, நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரியலூர்.

7) ஜே.அரவிந்தன், அரசு மேல்நிலைப்பள்ளி, சோளங் குடிகாடு.

8) கே.கீர்த்தனா, பாத்திமா மெட்ரிக் பள்ளி, ஜெயங் கொண்டம்.

9) எம்.மாதவன், ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளி, மேலமாத்தூர்.

10) கே.குணால், வெற்றி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, இ. வெள்ளனூர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 2017-18-ம் கல்வி ஆண்டில் தலா ரூ.10 ஆயிரம் ‘தினத்தந்தி’ கல்வி நிதி பெற தகுதி பெற்றுள்ள 10 மாணவ - மாணவிகள் பெயர் விவரம் வருமாறு:-

1) கே. பிருந்தா, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, குன்னம்.

2) ஆர்.பூமிகா, அரசு மேல் நிலைப்பள்ளி, கீழப்பெரம் பலூர்.

3) டி.காயத்ரி, அரசு மேல் நிலைப்பள்ளி, வயலபாடி.

4) ஏ.இந்துஷா, அரசு மேல் நிலைப்பள்ளி, ஓகளூர்.

5) பி.நவீன்ராஜ், செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அந்தூர்.

6) ஏ.சுமையா, செயின்ட் ஆண்ட்ரூஸ் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, பெரம்பலூர்.

7) எஸ். செல்வமணி, அரசு மேல்நிலைப்பள்ளி, வேப்பந்தட்டை.

8) கே.கிருஷ்ணவேணி, அரசு மேல்நிலைப்பள்ளி, நக்கசேலம்.

9) எஸ். கபிலன், சுவாமி விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி, அரும்பாவூர்.

10) ஜி. பவித்ரா, அரசு மேல்நிலைப்பள்ளி, எஸ். ஆடுதுறை.

இந்த மாணவ-மாணவிகளுக்கு தினத்தந்தி கல்வி நிதி வழங்கும் விழா அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு நடை பெறுகிறது.

விழாவுக்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் மு.விஜயலட்சுமி தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு கல்வி நிதிக்கான வரைவோலைகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனைவர் அ.புகழேந்தி, மாவட்ட கல்வி அலுவலர் அரி.செல்வராசு ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். முன்னதாக திருச்சி தினத்தந்தி மேலாளர் எஸ்.ஆர். சிவசுப்பிரமணியன் வரவேற்று பேசுகிறார். முடிவில் அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சகோதரி இசபெல்லா மேரி நன்றி கூறுகிறார்.

மேலும் செய்திகள்