கர்ப்பிணிகளுக்கு மீன்

கர்ப்பிணி பெண்கள் வாரம் மூன்று முறை மீன் சாப்பிடுவது குழந்தையின் வளர்ச்சியை மேம்படுத்தும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.;

Update: 2018-11-25 10:49 GMT
தொடர்ந்து கொழுப்பு கலந்த மீன் வகைகளை சாப்பிட்டு வருவதன் மூலம் வயிற்றில் இருக்கும் குழந்தையின் பார்வை திறனும், மூளையின் செயல்பாடுகளும் மேம்படும். இதனை பின்லாந்தில் உள்ள துர்க்கு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ‘‘கர்ப்பிணி பெண்களின் கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு மீன் பயன் தருவதாக எங்கள் ஆய்வு முடிவு அமைந்துள்ளது’’ என்கிறார், பல்கலைக்கழக அதிகாரியான, ஹிர்சி லெய்டீனன். இந்த ஆய்வுக்காக கர்ப்பிணி பெண்களின் உணவு பழக்கமும், உணவு ஆரோக்கியமும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. குழந்தையின் வளர்ச்சியும் கருத்தில் கொள்ளப்பட்டது.

மீனில் இருக்கும் புரதம் குழந்தையின் சருமம், தசை, முடி, எலும்புகளின் வளர்ச்சிக்கு அவசியமானது. அதனால் கர்ப்பகாலத்தில் கர்ப்பிணி பெண்கள் கூடுதலாக 25 சதவீதம் புரதம் சாப்பிடுவது அவசியம். குழந்தைகளின் பற்கள், இதயம், நரம்புகள், தசைகளை வலுப்படுத்துவதில் வைட்டமின் டி-யின் பங்களிப்பும் இருக்கிறது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி கர்ப்பிணி பெண்களின் எலும்புகள், பற்களை வலுப்படுத்தவும் மீன் உதவும். கருவில் இருக்கும் குழந்தைக்கு ஆக்சிஜனை ரத்தத்தின் வழியாக எடுத்து செல்வதில் இரும்புச்சத்து முக்கிய பங்காற்றுகிறது. கர்ப்பிணி பெண்களின் நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்தும். அதனால் கர்ப்ப காலத்திற்கு முன்பும், பின்பும் உணவில் தவறாமல் மீனை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்