தானேயில் தொழிற்சாலையில் ஊழியர் அடித்து கொலை வாலிபருக்கு வலைவீச்சு

தானேயில் தொழிற்சாலையில் ஊழியரை அடித்துக்கொன்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2018-11-24 23:15 GMT
தானே, 

தானேயில் தொழிற்சாலையில் ஊழியரை அடித்துக்கொன்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

சண்டை

தானேயில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பலிராம் பாலி(வயது55), பர்மான் கான்(20) ஆகிய 2 பேர் அங்கேயே தங்கியிருந்து வேலை பார்த்து வந்தனர். சம்பவத்தன்று இரவு இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் உண்டானது.

இதில், இருவரும் ஒருவரையொருவர் தகாத வார்த்தைகளால் திட்டி சண்டையிட்டு கொண்டனர். அதன் பின்னர் இருவரும் தூங்கிவிட்டனர்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் காலை உரிமையாளர் தொழிற்சாலைக்கு வந்தார்.

அடித்து கொலை

அப்போது, தொழிற்சாலையின் இரும்பு ஷட்டர் திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பலிராம் பாலி ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவர் அடித்து கொலை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உடனே போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணையில், பர்மான் கான் தான் அவரை அடித்து கொலை செய்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பர்மான் கானை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்