மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்து 6 மாத குழந்தை- தாய் பலி தந்தை, மகள் படுகாயம்
மோட்டார் சைக்கிளில் சென்றபோது கீழே விழுந்ததில், லாரி சக்கரத்தில் சிக்கி 6 மாத குழந்தை பலியானது. தாய் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தந்தை, மகள் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மும்பை,
மோட்டார் சைக்கிளில் சென்றபோது கீழே விழுந்ததில், லாரி சக்கரத்தில் சிக்கி 6 மாத குழந்தை பலியானது. தாய் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தந்தை, மகள் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
விபத்து
மும்பை குர்லா கோகினூர் சிட்டி பகுதியை சேர்ந்தவர் கலிம் ஷேக் (வயது35). இவரது மனைவி மஷ்யா(30). இவர்களுக்கு சபா(8) என்ற மகள் இருக்கிறாள். மேலும் 6 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை இருந்தது. சம்பவத்தன்று இரவு கலிம் ஷேக் தனது மனைவி, குழந்தைகளுடன் தெற்கு மும்பையில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். தாதர் அம்பேத்கர் மார்க் பகுதியில் சென்றபோது சாலையில் இருந்த பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் இறங்கியதில் நிலைதடுமாறி சரிந்தது.
இதில், 4 பேரும் மோட்டார் சைக்கிளுடன் சாலையில் விழுந்தனா். இதில், கலீம் ஷேக், மஷ்யா மற்றும் சபா 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
டிரைவர் கைது
அப்போது, அந்த வழியாக பின்னால் வேகமாக வந்த டேங்கர் லாரியின் சக்கரத்தில் 6 மாத குழந்தை சிக்கிக்கொண்டது. இதில், குழந்தை தந்தை கண் எதிரேயே உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தகவல் அறிந்து வந்த போய்வாடா போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து டேங்கா் லாரி டிரைவர் சந்தோஷ் கவுல்(25) என்பவரை கைது செய்தனர்.
இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தையின் தாய் மஷ்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த சம்பவம் அவர்கள் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.