புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் நிவாரணம் குறித்து அறிவிப்பு ஏமாற்றமளிக்க கூடிய வகையில் உள்ளதால் நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள வீடுகள், குடிசைகளுக்கு முழு நிவாரணம் வழங்கி, வீடுகளை புனரமைப்பு செய்ய ரூ.1 லட்சம் வழங்க வேண்டும். நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி அறிவித்து இருந்தது.
அதன்படி நேற்று திருவாரூர் தாசில்தார் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், விவசாய சங்க மாவட்ட செயலாளருமான மாசிலாமணி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் வீராச்சாமி, முருகானந்தம், மாவட்டக்குழு உறுப்பினர் நாகராஜன், ஒன்றிய செயலாளர் புலிகேசி, நகர செயலாளர் மாரியப்பன், நிர்வாகிகள் செல்வம், சிவப்பிரகாசம், தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகில் கஜா புயலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின குடும்பங்களுக்கு நிவாரணமாக ரூ.25 லட்சமும், வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடும், ஆடு, மாடுகளை இழந்தவர்களுக்கு உரிய நிவாரணமும், பயிர் காப்பீடு தொகைக்கான தேதியை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சந்திரராமன் தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைச்செயலாளர் ராஜா, நகர செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நீடாமங்கலம் தாசில்தார் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் நடேச.தமிழார்வன் தலைமை தாங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலரும் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
நன்னிலம் தாசில்தார் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் தீன.கவுதமன் தலைமை தாங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலரும் கலந்து கொண்டனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். பயிர்க்காப்பீடு செய்யும் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மன்னார்குடி தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் மாலாபாண்டியன், ஒன்றிய செயலாளர் வீரமணி, நகர செயலாளர் கலைச்செல்வன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் துரை.அருள்ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மன்னார்குடி நகராட்சி அலுவலகம் அருகில் இருந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் காந்தி ரோடு, பெரிய கடைத்தெரு வழியாக தாசில்தார் அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்றனர்.