விபத்தில் சிக்கிய பஸ் 15 ஆண்டுகள் இயங்கிய பிறகு மீண்டும் அனுமதி: வட்டார போக்குவரத்து அதிகாரி பணி இடைநீக்கம் குமாரசாமி அதிரடி உத்தரவு
விபத்தில் சிக்கிய பஸ்,15 ஆண்டுகள் இயங்கியபிறகுமீண்டும் அனுமதி அளித்த வட்டார போக்குவரத்து அதிகாரியை பணி இடைநீக்கம் செய்து குமாரசாமி அதிரடி உத்தரவிட்டார்.
மண்டியா,
விபத்தில் சிக்கிய பஸ்,15 ஆண்டுகள் இயங்கியபிறகுமீண்டும் அனுமதி அளித்த வட்டார போக்குவரத்து அதிகாரியை பணி இடைநீக்கம் செய்து குமாரசாமி அதிரடி உத்தரவிட்டார்.
15 ஆண்டுகள் இயங்கிய பஸ்
மண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாலுகா கனகனமரடி கிராமத்தில் நேற்று தனியார் பஸ் கால்வாயில் கவிழ்ந்த விபத்தில் 30 பேர் பலியானார்கள். விபத்துக்குள்ளான பஸ் மங்களூருவை சேர்ந்த சங்கர் விட்டல் என்ற பஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது ஆகும். மங்களூரு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த 2001-ந் தேதி இந்த பஸ்சை இயக்க அனுமதி வாங்கப்பட்டது. பின்னர் அந்த பஸ் மங்களூரு சிட்டி ஹம்மன்கட்டாவில் இருந்து சுல்தான்பத்தேரி என்ற பகுதி வரை நகர பஸ்சாக இயங்கி வந்துள்ளது.
15 வருடங்களுக்கு மட்டுமே அந்த பஸ்சை இயக்க வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் அனுமதி அளித்து உள்ளனர். 15 ஆண்டு்கள் ஓடியதும் அந்த பஸ்சை மீண்டும் இயக்க வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை.
மீண்டும்ஓட்டஅனுமதி
இதனால் அந்த பஸ் நிறுவன உரிமையாளர், அந்த பஸ்சை மண்டியா டவுன் பண்டிகவுடா லே-அவுட் பகுதியை சேர்ந்த சீனிவாஸ் என்பவருக்கு விற்று உள்ளார். அந்த பஸ் மண்டியாவில் இருந்து பாண்டவபுரா வரை இயக்கப்பட்டு வந்துள்ளது.
தற்போது அந்த பஸ் தான் கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்தில் சிக்கியதும், அதில் 30 பேர் இறந்த கோர சம்பவமும் நடந்து உள்ளது.
பணி இடைநீக்கம்
இதற்கிடையே விபத்தில் சிக்கிய பஸ்சை இயக்க அனுமதி வழங்கியதற்காக மண்டியா மாவட்ட போக்குவரத்து கழக அதிகாரி அனந்தகவுடாவை முதல்-மந்திரி குமாரசாமி பணி இடைநீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.