அரசு பஸ் டிரைவருக்கு ரூ.14½ லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட்டு உத்தரவு

விபத்தில் ஊனமுற்ற அரசு பஸ் டிரைவருக்கு ரூ.14½ லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2018-11-24 22:30 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேஉள்ள வலையபட்டி கிராமத்தைச் சேர்ந்த வைரமுத்து மகன் பொன்ராஜ் (வயது 31). இவர் அரசு பஸ் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 3.9.2016 அன்று இரு சக்கர வாகனத்தில் கிருஷ்ணன்கோவிலில் இருந்து வலையபட்டிக்கு சென்றபோது எதிரே வலையபட்டியைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணனுக்கு சொந்தமான ஆட்டோ மோதியது.

இதில் பஸ் டிரைவர் பொன்ராஜ் படுகாயம் அடைந்து மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இந்த விபத்தில் இவர் நிரந்தர ஊனம் அடைந்தார்.

இதனையடுத்து இழப்பீடு கோரி, ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு மற்றும் மோட்டார் வாகன விபத்துகள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயத்தில் பொன்ராஜ் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி டி.சம்பத்குமார், ராஜபாளையத்தில் உள்ள நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் கம்பெனி, பொன்ராஜூக்கு ரூ.14 லட்சத்து 58 ஆயிரத்து 700–ஐ இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்