பள்ளிக்கூட வாசலில் இருசக்கர வாகனம் நிறுத்தும் தகராறில் பெண்ணுக்கு கத்தியால் வெட்டு மற்றொரு பெண் கைது
பள்ளிக்கூட வாசலில் இருசக்கர வாகனம் நிறுத்தும் தகராறில் பெண்ணை சிறு கத்தியால் சரமாரியாக வெட்டிய மற்றொரு பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
அம்பத்தூர்,
சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் சுலோசனா (வயது 30). இவர், நேற்று முன்தினம் மாலை முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் தனது மகளை அழைத்துவர இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு வெளியே காத்திருந்தார்.
அப்போது முகப்பேர் கிழக்கு 2–வது பிளாக் பகுதியை சேர்ந்த அமிர்தா (37) என்ற பெண்ணும் தனது மகனை அழைத்துச் செல்வதற்காக இருசக்கர வாகனத்துடன் பள்ளிக்கு வெளியே காத்திருந்தார். அந்த இடத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்தியதில் சுலோசனா, அமிர்தா இடையே தகராறு ஏற்பட்டது.
இருவருக்கும் வாக்குவாதம் முற்றி, கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த அமிர்தா, தனது கைப்பையில் வைத்து இருந்த சிறிய மடக்கு கத்தியால் சுலோசனாவை சரமாரியாக வெட்டினார்.
இதில் முகம், கை, மார்பு என உடலில் 24 இடங்களில் வெட்டு விழுந்ததால் சுலோசனா வலியால் அலறி துடித்தார். உடனே அருகில் இருந்த சக மாணவர்களின் பெற்றோர் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள், இருவரையும் விலக்கிவிட்டனர். படுகாயம் அடைந்த சுலோசனா, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இது குறித்த புகாரின் பேரில் ஜெ.ஜெ.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அமிர்தாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பள்ளிக்கூட வாசலில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் தங்கள் குழந்தைகளை அழைத்துவர காத்திருந்த பெற்றோர் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.