திருவள்ளூர் ஊத்துக்கோட்டை அருகே புதிதாக கட்டப்படும் கண்ணன்கோட்டை நீர்தேக்க கரை சேதம் பொதுமக்கள் அச்சம்
ஊத்துக்கோட்டை அருகே புதிதாக கட்டப்படும் கண்ணன்கோட்டை நீர்தேக்கத்தின் கரை சேதம் அடைந்தது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஊத்துக்கோட்டை,
பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் நீர் தேக்கங்களில் சேமித்து வைக்கப்படும் தண்ணீர் மற்றும் நெம்மேலி, மீஞ்சூர் பகுதிகளில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களில் இருந்து பெறப்படும் தண்ணீர், வீராணம் ஏரியில் இருந்து வரும் தண்ணீரை கொண்டு சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படுகிறது.
இது தவிர ஆரணி, கொசஸ்தலை ஆற்று படுகைகளில் அமைந்துள்ள சிறுவானூர், மோவூர், கீழானூர், புல்லரம்பாக்கம், காரணை மேலானூர், மாகரல், வெள்ளியூர் பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்தும் தண்ணீர் பெறப்படுகிறது. ஆனால் சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியவில்லை. இதனை கருத்தில் கொண்டு மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஊத்துக்கோட்டை அருகே உள்ள கண்ணன்கோட்டை– தேர்வாய்கண்டிகை ஏரிகளை ஒன்றிணைத்து ரூ.330 கோடியில் கண்ணன்கோட்டை நீர்தேக்கம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
அதன் பேரில் 1485 ஏக்கர் நிலப்பரப்பில் நீர்தேக்கம் அமைக்கும் பணிகள் 2013–ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. கிருணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விடப்படும் தண்ணீரை ஜங்காலபள்ளியில் மதகு அமைத்து கண்ணன்கோட்டைக்கு கொண்டு செல்ல உள்ளனர். அதே போல் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சத்தியவேடு காட்டில் பாயும் ஓடைகளின் தண்ணீர் கண்ணன்கோட்டை நீர்தேக்கத்தில் சேமித்து வைக்க உள்ளனர். இதற்காக ஜங்காலபள்ளியில் கிருஷ்ணா நதி கால்வாயின் குறுக்கே மதகுகள் அமைக்கும் பணி மற்றும் சத்தியவேடு காட்டில் உள்ள ஓடைகளின் தண்ணீர் அணைக்கு வரும் விதமாக கால்வாய் அமைக்கும் பணிகள் நிறைவடைந்தன.
இது மட்டுமல்லாமல் ஜங்காலபள்ளியில் இருந்து கண்ணன்கோட்டை வரை கிருஷ்ணா நதி நீர் கொண்டு செல்ல திறந்த வெளி கால்வாய் அமைக்கும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. அதே போல் 2 ஏரிகளை ஒன்றிணைத்து கட்டப்படும் அணையில் 7.15 கிலோ மீட்டர் தூரம் வரை கரைகள் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றன.
இந்த கரைகள் மீது வாகனங்கள் வந்து செல்லும் விதமாக சாலை அமைக்கும் பணிகள் இரவு பகலாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக அணை நீர் பிடிப்பு பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு அணையின் கிழக்கு திசையில் உள்ள கரை 20 மீட்டர் தூரத்துக்கு சேதம் அடைந்துள்ளது. அணை முழுவதுமாக கட்டி முடிக்கபடாத நிலையில் கரை சேதம் அடைந்துள்ளதால் சுற்று வட்டார பகுதியில் உள்ள பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.