சேலம் விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் வரவேற்பு
சேலம் விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஓமலூர்,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் செயலாளர் ஆர்.தினேஷ்குமாரின் திருமண வரவேற்பு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு நாமக்கல் மாவட்டம் அத்தனூரில் உள்ள ஸ்ரீராசி மகாலில் நடைபெறுகிறது. இந்த விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் நேற்று புதுச்சேரியில் இருந்து ஓமலூர் அருகே காமலாபுரத்தில் உள்ள சேலம் விமான நிலையத்துக்கு தனி விமானம் மூலம் வந்தார். அங்கு மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதில் சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ஆ.ராஜா, மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மத்திய மாவட்ட அவைத்தலைவர் கலையமுதன், பொருளாளர் சுபாசு, ஒன்றிய செயலாளர்கள் செல்வகுமரன், குப்புசாமி, ரவிசந்திரன், மாநில பொது குழு உறுப்பினர் தங்கராஜ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அறிவழகன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் அருண்பிரசன்னா, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் கருணாகரன், நாரணபாளையம் ஊராட்சி தி.மு.க. செயலாளர் எம்.பி.மணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் சேலம் குரங்குச்சாவடி பகுதியில் உள்ள ஜி.ஆர்.டி. ஓட்டலில் தங்கி உள்ளார். அங்கு அவர் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார். இன்று காலை கார் மூலம் நாமக்கல் மாவட்டம் அத்தனூரில் நடைபெறும் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று, மணமக்களை வாழ்த்துகிறார். பின்னர் அவர் சேலத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.