புதுச்சேரி வக்கீல், மனைவி படுகொலையில் டிரைவர் உள்பட 2 பேர் கைது பரபரப்பு வாக்குமூலம்
புதுவை அண்ணாநகரில் வக்கீல், அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகை-பணத்தை பறிமுதல் செய்தனர்.கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.;
புதுச்சேரி,
புதுச்சேரி நெல்லித்தோப்பு அண்ணா நகர் 14-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(72). வக்கீல். இவரது மனைவி ஹேமலதா(65). பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகளும் உள்ளனர். மகன்கள் 2 பேரும் பிரான்ஸ் நாட்டிலும், மகள் சிங்கப்பூரிலும் வசித்து வருகின்றனர். பாலகிருஷ்ணனும் அவரது மனைவி மட்டும் புதுவையில் உள்ள 3 மாடி வீட்டில் தரைத்தளத்தில் வசித்து வந்தனர். இவர்களது முதல் மகன் முன்னாள் அமைச்சர் தேனீ.ஜெயக்குமாரின் மகளை திருமணம் செய்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டின் முன்பு கோலம் போடவில்லை. வீட்டில் ஆள்நடமாட்டம் இல்லாமல் இருந்தது. எனவே அந்த வீட்டின் 2-வது தளத்தில் குடியிருப்பவர்கள் இது குறித்து முன்னாள் அமைச்சர் தேனீ.ஜெயக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர் அங்கு வந்து பார்த்தார். அப்போது பாலகிருஷ்ணனும், அவரது மனைவி ஹேமலதாவும் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பது தெரியவந்தது.
உடனே அவர் இது குறித்து உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா, உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசெல்வம், சிறப்பு அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் அங்கு இருந்த வெள்ளி பொருட்கள், நகைகள் மற்றும் ஹேமலதா அணிந்திருந்த சில நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. வீட்டில் இருந்த குடும்ப புகைப்படத்தில் தேனீ.ஜெயக்குமாரின் மகளின் முகத்தில் மட்டும் வட்டமிட்டு வைக்கப்பட்டு இருந்தது. இறந்தவர்களின் முகத்தில் பெருக்கல் குறி இருந்தது. மற்றவர்களின் முகத்தில் டிக் செய்யப்பட்டு இருந்தது. இது போலீசாருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பாலகிருஷ்ணன் வெளியூர் எங்காவது செல்ல வேண்டும் என்றால் முன்னாள் அமைச்சர் தேனீ.ஜெயக்குமாரின் கார் டிரைவரை தொடர்பு கொள்வார். அவர் தற்காலிக டிரைவர் ஒருவரை பாலகிருஷ்ணன் வீட்டுக்கு அனுப்பி வைப்பது தெரியவந்தது.
உடனே போலீசார் தேனீ.ஜெயக்குமாரின் கார் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த முகமது காசிம் என்பவரை தற்காலிக டிரைவராக அனுப்பியிருப்பது தெரியவந்தது. கடந்த 3 மாதங்களாக பாலகிருஷ்ணன் அழைக்கும் போது முகமது காசிம் கார் டிரைவராக சென்று வந்ததும் தெரியவந்தது.
உடனே போலீசார் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். அப்போது அவரது செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது. இது போலீசாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடனே போலீசார் அவர் எங்கெங்கு சென்றார் என்று செல்போன் மூலம் கண்காணித்தனர். அப்போது அவர் கொலை நடந்த நேரத்தில் பாலகிருஷ்ணன் வீட்டில் இருந்தது செல்போன் டவர் மூலம் தெரியவந்தது. மேலும் அவர் கடந்த 2 நாட்களாக கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்த முகமது இலியாஸ் என்பவரிடம் அடிக்கடி பேசியதும் தெரியவந்தது.
இந்த நிலையில் முகமது காசிம் நேற்று ஒரு காரில் டிரைவராக சென்னை சென்று விட்டு புதுச்சேரி திரும்பியது தெரியவந்தது. இதனை கண்காணித்த போலீசார் அவர் புதுவை வந்த உடன் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்திய போது தனது நண்பர் முகமது இலியாசுடன் சேர்ந்து பாலகிருஷ்ணன், அவரது மனைவி ஹேமலதா ஆகியோரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவர் கொடுத்த தகவலின் பேரில் கோட்டக்குப்பத்தை சேர்ந்த முகமது இலியாசையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 2 பேரிடம் இருந்து போலீசார், 2 செல்போன்கள், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் திருடிய நகை, வெள்ளிப்பொருட்கள் மற்றும் வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்தனர்.
பிடிபட்ட முகமது காசிம் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
பாலகிருஷ்ணனின் வீட்டில் ஏராளமான பணம், நகைகள் இருக்கும் என்று நினைத்தேன். இந்த நிலையில் அவரது வீட்டில் இருந்த மெத்தை கிழிந்து இருந்தது. எனவே அதனை தைக்க ஆள் வேண்டும் என்று கேட்டார். எனவே நான் எனது நண்பரான கோட்டக்குப்பத்தை சேர்ந்த கறிக்கடை ஊழியர் முகமது இலியாசை மெத்தை தைப்பது போல அழைத்துச்சென்று வீட்டில் இருக்கும் பொருட்களை கொள்ளையடிக்கலாம் என்று திட்டமிட்டேன்.
அதன்படி நாங்கள் இருவரும் சம்பவத்தன்று அவர்களது வீட்டின் அருகில் உள்ள காலிமனையில் காத்திருந்தோம். அப்போது 2 பேரும் மது குடித்திருந்தோம். 2-வது மாடியில் இருப்பவர்கள் தினந்தோறும் கடைக்கு சென்று விட்டு காலை 11.30 மணிக்கு வீடு திரும்புவார்கள். . அவர்கள் வீட்டிற்கு சென்ற பின்னர் காலி மனையில் எங்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு நாங்கள் பாலகிருஷ்ணன் வீட்டிற்கு சென்றோம்.
அப்போது முகமது இலியாசை அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்து மெத்தையை தைக்க வந்திருப்பதாக கூறினேன். அவர்கள் படுக்கை அறைக்கு அழைத்து சென்றனர். அப்போது கதவை பூட்டி விட்டு உள்ளே சென்ற நாங்கள் திடீரென அவர்கள் 2 பேரையும் காலால் உதைத்தோம். அதில் கணவன்-மனைவி நிலை குலைந்து கீழே விழுந்தனர். பின்னர் இருவரிடமும் வீட்டில் எங்கெல்லாம் நகை பணம் வைத்துள்ளர்கள் என்று கேட்டோம்.
ஆனால் அவர்கள் அனைத்தையும் வங்கி லாக்கரில் வைத்து விட்டதால் தற்போது வீட்டில் எதுவும் இல்லை என்று கூறினர். இதனால் விரக்தி அடைந்த நாங்கள் அவர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தி காயப்படுத்தினோம். இதில் அவர்கள் மயக்கம் அடைந்தனர். பின்னர் அவர்களை கழுத்தை நெரித்தும், தலையணையால் முகத்தை அமுக்கியும் கொலை செய்தோம். பின்னர் கொலையை திசை திருப்புவதற்காக அங்கு இருந்த அவர்களது குடும்ப புகைப்படத்தை எடுத்து அதில் பெருக்கல் குறியீடு, டிக் மற்றும் வட்டமிட்டும் சென்றோம்.
பின்னர் வீடு முழுவதும் தேடினோம். அப்போது நாங்கள் எதிர்பார்த்த அளவு அதிகம் நகை, பணம் கிடைக்கவில்லை. எனவே அங்கு இருந்த நகைகள், ரொக்க பணம், ரூ.1½ லட்சம் வெளிநாட்டு பணம் மற்றும் வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்தோம். ஹேமலதா அணிந்திருந்த நகைகளில் பாதியை மட்டும் எடுத்துக்கொண்டோம். பின்னர் மாலை வரை வேறு எங்காவது பொருட்கள் உள்ளதா என்று தேடினோம். அப்போது எங்களுக்கு பசி எடுத்தது. உடனே சமையல் அறைக்கு சென்று டீ போட்டு குடித்தோம். பின்னர் மாலை 4 மணிக்கு மேல் வீட்டின் கதவை திறந்து வெளியே வந்து யாராவது இருக்கின்றார்களா? என்று பார்த்தோம். அப்போது யாரும் இல்லை. பின்னர் நாங்கள் அங்கிருந்து தப்பி ஓடினோம். கொள்ளையடித்த பொருட்களை கோட்டக்குப்பத்தில் ஒரு இடத்தில் மறைத்து வைத்திருந்தோம். தலைமறைவாக இருந்த எங்களை போலீசார் கைது செய்து பொருட்களை பறிமுதல் செய்தனர். இவ்வாறு அவர் கூறினார்.
கொலை நடந்ததாக கூறப்பட்ட 24 மணி நேரத்திற்குள் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த உருளையன்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனசெல்வம், சிறப்பு அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், சந்தோஷ் ஆகியோருக்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா பாராட்டு தெரிவித்தார்.