வில்லியனூர் அருகே மின்னல் தாக்கியதில் 12 வீடுகளில் மின்சாதன பொருட்கள் வெடித்து சிதறியது
வில்லியனூர் அருகே மின்னல் தாக்கியதில் வீடு சேதமடைந்தது. 12 வீடுகளில் மின்சாதன பொருட்கள் வெடித்து சிதறியது.
வில்லியனூர்,
தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் புதுவை பகுதியில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடிய விடிய பெய்த மழையால் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
நேற்று முன்தினம் நள்ளிரவு பெய்த மழையின்போது வில்லியனூர் அருகே கோர்க்காடு கிராமத்தை சேர்ந்த விமல்ராஜ் என்பவரின் வீட்டின் மொட்டை மாடியில் மின்னல் தாக்கியது. இதில் சுவரில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்தது. மேலும் அவரது வீடு மற்றும் பக்கத்தில் உள்ள புருஷோத்தமன், வரதராஜ், வேல்முருகன், ராஜேஷ் உள்பட 12 பேரின் வீடுகளில் உள்ள டி.வி., பிரிட்ஜ், மிக்சி, மின்விசிறி உள்பட மின்சாதன பொருட்கள் அனைத்தும் வெடித்து சிதறியது.
திடீரென்று மின்சாதனங்கள் வெடித்ததால் அதிர்ச்சி அடைந்து வீடுகளில் இருந்தவர்கள் அலறி அடித்து வெளியே ஓடிவந்தனர். மின்னல் தாக்கியதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் விடிய விடிய அவர்கள் மின்சாரமின்றி தவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த அமைச்சர் கந்தசாமி நேற்று காலை கோர்க்காடு கிராமத்துக்கு சென்றார். மின்னல் தாக்கி சேதமடைந்த விமல்ராஜ் வீட்டை அவர் பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது அங்கிருந்த வருவாய்த்துறை அதிகாரிகளிடம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க அறிவுறுத்தினார். அப்போது நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மனோகர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.