கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பேராவூரணி தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ நிதி உதவிகளை வழங்கி ஆறுதல் கூறினார்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம் பேராவூரணி தொகுதிக்குட்பட்ட கழுகப்புலிகாடு பகுதியை சேர்ந்த மக்கள், தங்களுக்கு நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து அந்த பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மக்களை பேராவூரணி தாசில்தார் அலுவலகத்திற்கு அழைத்து சென்ற அமைச்சர் கடம்பூர் ராஜூ, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்தார்.
மேலும் பேராவூரணி தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராம மக்களுக்கு வழங்குவதற்கான நிவாரண பொருட்கள் வருவாய் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிவாரண பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக வழங்கும்படி அமைச்சர் உத்தரவிட்டார்.
பேராவூரணி தாசில்தார் அலுவலகத்தில் நிவாரண பொருட்களை பெற்று செல்ல வந்த பொதுமக்களுக்கு, தனது சொந்த செலவில் நிதி உதவிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார். மதிய உணவும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அப்போது அங்குவந்திருந்த ஸ்டாலின் என்ற மாற்றுத்திறனாளி், தனக்கு பராமரிப்பு செலவுக்கு அரசின் நிதியுதவி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை ஏற்று மாதந்தோறும் அவருக்கு பராமரிப்புத்தொகை கிடைத்திட உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
மேலும் கணக்கெடுப்பு முடிந்தவுடன் அந்த பகுதி மக்களுக்கு நிவாரண தொகையை விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுக்குமாறும் அலுவலர்களுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ உத்தரவிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்ததும், உரிய இழப்பீடுகள் விரைந்து வழங்கப்படும். பல்வேறு மாவட்டங்களில் இருந்்து நிவாரண பொருட்கள் வந்து கொண்டிருக்கிறது. நிவாரண பொருட்கள் தடையின்றி மக்களுக்கு பிரித்து வழங்கப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்துவதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி அனைத்து நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.