நள்ளிரவில் வீட்டின் மேற்கூரை இடிந்து மூதாட்டி பலி

பரமக்குடியில் நள்ளிரவில் வீட்டின் மேற்கூரை இடிந்து மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய தங்கை படுகாயம் அடைந்தார்.

Update: 2018-11-22 22:30 GMT
பரமக்குடி,


பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட எமனேசுவரம் ஈசுவரன் கோவில் 5-வது தெருவை சேர்ந்தவர் இந்துமதி (வயது 83). இவரும் இவருடைய தங்கை சாந்தம் (75) என்பவரும் பழமையான ஓட்டு வீட்டிற்குள் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் திடீரென மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் அக்காள்-தங்கை இருவரும் இடிபாடுகளுக்குள் சிக்கினர். தகவல் அறிந்ததும் பரமக்குடி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது இந்துமதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவருடைய தங்கை சாந்தம் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுதொடர்பாக எமனேசுவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அமுதா வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்