நெடுஞ்சாலைதுறை அலுவலகத்தில் விஜயதரணி எம்.எல்.ஏ. உள்ளிருப்பு போராட்டம்

குமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட குழித்துறை, மேல்புறம், ஞாறாம்விளை, திக்குறிச்சி பகுதி சாலைகள் செப்பனிடப்படாமல் சேதமடைந்து காணப்படுகின்றன.

Update: 2018-11-22 22:45 GMT
களியக்காவிளை,

குமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட குழித்துறை, மேல்புறம், ஞாறாம்விளை, திக்குறிச்சி பகுதி சாலைகள் செப்பனிடப்படாமல் சேதமடைந்து காணப்படுகின்றன. இந்த சாலைகளை செப்பனிட பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதுதொடர்பாக அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை விடுப்பதற்காக நேற்று விஜயதரணி எம்.எல்.ஏ. குழித்துறையில் உள்ள நெடுஞ்சாலைதுறை கோட்ட அலுவலகத்துக்கு சென்றார். அங்கு அதிகாரிகளை சந்திக்க முடியாததால் அவர் திடீரென உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்.

இதில் குழித்துறை நகர காங்கிரஸ் கட்சி தலைவர் அருள்ராஜ், காங்கிரஸ் கட்சி மனித உரிமை துறை மாவட்ட தலைவர் ரவிசங்கர், மகிளா காங்கிரஸ் மாநில துணை தலைவி லைலா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் எம்.எல்.ஏ.வுடன் நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எழுத்து பூர்வமாக உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

மேலும் செய்திகள்