டாஸ்மாக்கடை விற்பனையாளரிடம் பணம் பறித்த வழக்கில் 6 வாலிபர்கள் கைது
நச்சலூர் அருகே டாஸ்மாக்கடை விற்பனையாளரிடம் பணம் பறித்த வழக்கில் 6 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த ஒரு மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.
நச்சலூர்,
கரூர் மாவட்டம், நச்சலூர் அருகே நெய்தலூர் காலனியில் அரசு டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கடையில் விற்பனையாளராக சூரியனூர் ஊராட்சி மேலப்பட்டியை சேர்ந்த பெரியசாமி(வயது40) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் தினமும் கடையில் விற்பனையாகும் பணத்தை எடுத்து வீட்டிற்கு கொண்டு சென்று மறுநாள் வங்கியில் செலுத்துவதை வழக்கமாக வைத்திருந்தார். அதேபோல கடந்த 11-ந்தேதி கடையில் மது விற்பனை செய்யப்பட்ட ரூ.4 லட்சத்து 49 ஆயிரத்தை தனது மோட்டார் சைக்கிளில் எடுத்து கொண்டு, வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
பெரியபனையூர் வீரமாகாளியம்மன் கோவில் அருகே வளைவில் சென்றபோது, 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கும்பல் பெரியசாமியை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, அவரிடமிருந்த ரூ.4 லட்சத்து 49 ஆயிரத்தை பறித்து சென்றனர். இது குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொள்ளை கும்பலை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை கவுண்டம்பட்டி ஒத்தக்கடை பஸ் நிறுத்தம் அருகே குளித்தலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது 3 பேரும் முன்னும், பின் முரணாக கூறினர். இதையடுத்து போலீசார் அவர்களை குளித்தலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர்.
போலீசார் விசாரணையில், வேங்காம்பட்டியை சேர்ந்த தேவராஜ் (வயது.21), குளித்தலை அண்ணா நகரை சேர்ந்த சந்தனபாண்டியன்(21), நங்கவரம் பேரூராட்சி தெற்கு மாடுவிழுந்தான் பாறையை சேர்ந்த பாலசுப்பிரமணியன்(21) என்பதும், டாஸ்மாக்கடை விற்பனையாளர் பெரியசாமியிடம் அரிவாளை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்றதும் தெரியவந்தது.
மேலும் அவர்களுடன் சேர்ந்து அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன், முதலைப்பட்டி மேலப்பட்டியை சேர்ந்த மணிகண்டன், திருச்சி ஸ்ரீரங்கம் தாலுகா சுப்புராயன்பட்டியை சேர்ந்த கவியரசு ஆகிய 3 பேரும் சேர்ந்து பறித்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து பணத்தை கொள்ளையடிக்க பயன்படுத்திய மோட்டார் சைக்கிள், ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் குளித்தலை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பிரசன்னேவ் முன்னிலையில் ஆஜர் படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி 6 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அனைவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.