மங்களமேடு போலீசாரை கண்டித்து 26-ந் தேதி பா.ம.க. போராட்டம்
இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்சினையில் பாரபட்சமாக நடந்து கொண்ட மங்களமேடு போலீசாரை கண்டித்து வருகிற 26-ந் தேதி பா.ம.க. சார்பில் பெரம்பலூரில் போராட்டம் நடத்துவது.;
குன்னம்,
பெரம்பலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பெரம்பலூர், குன்னம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் குன்னத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மருதவேல் வரவேற்றார். கூட்டத்தில் மாநில துணை பொது செயலாளரும், வன்னியர் சங்க மாநில செயலாளருமான வைத்திலிங்கம் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் மழவராயநல்லூர் கிராமத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்சினையில் பாரபட்சமாக நடந்து கொண்ட மங்களமேடு போலீசாரை கண்டித்து வருகிற 26-ந் தேதி பா.ம.க. சார்பில் பெரம்பலூரில் போராட்டம் நடத்துவது. வருகிற சிதம்பரம் பாராளுமன்ற தேர்தலிலும், குன்னம் சட்டமன்ற தேர்தலிலும் பா.ம.க. வெற்றி பெற பாடுபட வேண்டும். வருகிற 25-ந் தேதி சென்னையில் நடைபெறும் பா.ம.க. மகளிர் மாநாட்டில் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொள்ள வேண்டும். இனி வரும் காலங்களில் பவுர்ணமி அன்று ஒவ்வொரு கிளையிலும் கூட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில துணை தலைவர்கள் அனுக்கூர் ராஜேந்திரன், கண்ணபிரான், மதுரா செல்வராஜ், அரியலூர் மாவட்ட செயலாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய இளைஞரணி செயலாளர் குன்னம் கண்ணதாசன் நன்றி கூறினார்.