புயல் பாதித்த பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு
புயலால் பாதித்த பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டத்துக்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு மெழுகுவர்த்தி, போர்வைகள், பிஸ்கட், குடிநீர் பாட்டில்கள், மருந்து பொருட்கள் என ரூ.4 லட்சத்து 28 ஆயிரத்து 470 மதிப்பிலான நிவாரண பொருட்களை மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி நேற்று லாரி மூலம் அனுப்பி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் தனசேகரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலாஜி, வட்டாட்சியர்கள் முத்துலட்சுமி, விக்டோரியா (பேரிடர் மேலாண்மை) மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
அதேபோல் அரியலூர் நீதிமன்ற வளாகத்தில் இருந்து வக்கீல் சங்கம் சார்பில் ரு.2 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்துக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. நிவாரண பொருட்கள் ஏற்றிச் சென்ற வாகனத்தை மாவட்ட நீதிபதி சுமதி கொடியசைத்து அனுப்பி வைத்தார்.