பிரமாண பத்திரம் தாக்கல் செய்துவிட்டு மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்ட வாலிபருக்கு 345 நாள் சிறை

குற்றச்செயலில் ஈடுபடமாட்டேன் என போலீசில் பிராமண பத்திரம் தாக்கல் செய்துவிட்டு மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்ட வாலிபருக்கு 345 நாட்கள் சிறை தண்டனை விதித்து போலீஸ் துணை கமிஷனர் நடவடிக்கை எடுத்து உள்ளார்.

Update: 2018-11-22 22:45 GMT
திருவொற்றியூர்,

சென்னை எண்ணூர் காட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 22). இவர் மீது எண்ணூர் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு எண்ணூர் போலீஸ் உதவி கமிஷனர் தினகரன், இன்ஸ்பெக்டர் சத்யம் முன்னிலையில் மாதவரம் போலீஸ் துணை கமிஷனர் கலைச்செல்வனிடம் இனிமேல் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டேன் என்று தினேஷ்குமார் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

இதனிடையே முன்விரோதம் காரணமாக எண்ணூர் காமராஜர் நகரை சேர்ந்த பிரவீன் என்பவரது வீட்டை அடித்து உடைத்த வழக்கில் எண்ணூர் போலீசார், தினேஷ் குமாரை கைது செய்தனர்.

பிரமாண பத்திரம் தாக்கல் செய்துவிட்டு அதை மீறி தினேஷ்குமார் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்டதால், மாதவரம் துணை கமிஷனர் கலைச்செல்வன் அவரை 345 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்