புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1 கோடி நிவாரண பொருட்கள் டி.வி.எஸ். குழுமம் வழங்கியது
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1 கோடி நிவாரண பொருட்கள் டி.வி.எஸ். குழுமம் வழங்கியது. இந்த நிவாரணம் மூலம் 20 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த, 80 ஆயிரம் உறுப்பினர்கள் பயன் பெறுவார்கள்.
சென்னை,
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தலைஞாயிறு, வேதாரண்யம், வேளாங்கண்ணி ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம், ஸ்ரீனிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட் மூலம் நிவாரண பொருட்களை வழங்கி வருகிறது. ரூ.1 கோடி மதிப்பிலான 15,440 பாய்கள், 6 ஆயிரம் போர்வைகள், 10 ஆயிரம் விரிப்புகள், ஆயிரம் லுங்கிகள், ஆயிரம் சேலைகள் ஆகியவற்றை மாவட்டம் நிர்வாகம் மூலம் வழங்கி வருகிறது. இந்த நிவாரணம் மூலம் 20 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த, 80 ஆயிரம் உறுப்பினர்கள் பயன் பெறுவார்கள்.
இதுதவிர டி.வி.எஸ். நிறுவனம் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வுக்காக ரூ.2 கோடியை முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளது. இதற்கான காசோலையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், டி.வி.எஸ். மோட்டார் நிறுவன தலைவர் வேணு ஸ்ரீனிவாசன் ஏற்கனவே வழங்கியிருந்தார்.
ஸ்ரீனிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட் இந்தியாவில் 5 மாநிலங்களில் 5 ஆயிரம் கிராமங்களை தத்தெடுத்து அங்குள்ள மக்களின் வாழ்வுக்காக தொண்டாற்றி வருகிறது. இந்த நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள் பொது சுகாதாரம், குழந்தைகள் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வாகும். இந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்வரன் சிங் பணியாற்றி வருகிறார்.