திருவண்ணாமலை தீபத்திருவிழா: காணாமல் போகும் குழந்தைகள் பற்றி தகவல் தெரிவிக்க ‘வாட்ஸ் அப்’ எண் அறிவிப்பு வேலூர் சரக டி.ஐ.ஜி. தகவல்
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவில் காணாமல் போகும் குழந்தைகளை பற்றி தகவல் தெரிவிக்க ‘வாட்ஸ் அப்’ எண் அறிவிக்கப்பட்டுள்ளதாக வேலூர் சரக டி.ஐ.ஜி. வனிதா தெரிவித்து உள்ளார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத்திருவிழா நடைபெற்று வருகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4 மணி அளவில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. மாலை 6 மணி அளவில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. மகா தீபத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகா தீபத்திற்கு முன்னேற்பாடு பணிகள் குறித்து வேலூர் சரக டி.ஐ.ஜி. வனிதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பரணி தீபத்தரிசனத்திற்கு 8 ஆயிரம் பக்தர்களும், மகா தீபத்தரிசனத்திற்கு 10 ஆயிரம் பக்தர்களும் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர். இணையதள வசதி மூலம் டிக்கெட் மற்றும் அனுமதி சீட்டு பெற்றவர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். கோவிலுக்குள் செல்போன் எடுத்து செல்ல தடை செய்யப்பட்டு உள்ளது. மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தை காண உரிய அனுமதி சீட்டு பெற்ற 2 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவார்கள். பாதுகாப்பு பணிக்காக 5 டி.ஐ.ஜி.க்கள், 12 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 75 ஆயிரம் போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கோவிலுக்குள் 103 கண்காணிப்பு கேமராக்களும், நகரத்திற்குள் 53 இடங்களிலும், கிரிவலப் பாதையில் 60 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் 4 இடங்களில் மொபைல் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
11 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் மற்றும் 4 துணை தற்காலிக பஸ் நிலையங்களும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு கூடுதலாக காவல் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை, குற்றப்பிரிவு கட்டுப்பாட்டு அறை, போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை மற்றும் கோவில் கட்டுப்பாட்டு அறை என 4 சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் ஆளில்லா விமானம் மூலமும் 2 இடங்களில் கண்காணிக்கப்படுகிறது. காணாமல் போகும் குழந்தைகளை கண்டுபிடிக்க வசதியாக 11 தொழில் நுட்ப குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. காணாமல் போன குழந்தை எங்கு உள்ளது என்று கண்டறியவும், இதுகுறித்து தகவல் தெரிவிக்கவும் www.tvmpournami/child என்ற இணையதள வசதியை பயன்படுத்தி கொள்ளலாம்.
மேலும் மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க ‘வாட்ஸ் அப்’ எண் 8680999966 அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த எண்ணை பொது மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினர்.
அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி உடனிருந்தார்.
லீசாருக்கு தகவல் தெரிவிக்க ‘வாட்ஸ் அப்’ எண் 8680999966 அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த எண்ணை பொது மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினர்.
அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி உடனிருந்தார்.