திருமணத்துக்கு மறுத்த இளம்பெண் தாயுடன் காரில் கடத்தல் 2 பேர் கைது

திருமணத்திற்கு மறுத்த இளம்பெண் மற்றும் அவரது தாயை காரில் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-11-21 23:32 GMT
மும்பை, 

திருமணத்திற்கு மறுத்த இளம்பெண் மற்றும் அவரது தாயை காரில் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இளம்பெண், தாய் கடத்தல்

மும்பை செம்பூர் மாகுல் பகுதியை சேர்ந்தவர் மிலேஷ்(வயது31). இவர் அந்த பகுதியை சேர்ந்த 28 வயது பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். அண்மையில் அவர் அந்த பெண்ணிடம் தனது காதலை தெரிவித்து திருமணத்துக்கு சம்மதம் கேட்டார். ஆனால் அந்த பெண் அவரை திருமணம் செய்வதற்கு மறுத்து விட்டார். இதனால் மிலேசுக்கு அந்த பெண் மீது கடும் ஆத்திரம் உண்டானது.

இதற்கு பழிவாங்குவதற்காக இளம்பெண்ணை கடத்த தனது நண்பர் கணேஷ் என்பவருடன் சேர்ந்து திட்டம் போட்டார். கடந்த 18-ந்தேதி மிலேஷ் தனது நண்பர் கணேசுடன் இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்றார். பின்னர் வீட்டில் இருந்த அந்த பெண் மற்றும் அவரது தாய் இருவரையும் அவர்கள் காரில் கடத்திச்சென்றனர்.

2 பேர் கைது

கார் ஜனதா மார்க்கெட் அருகே மெதுவாக சென்ற போது இளம்பெண்ணின் தாய் கீழே குதித்து தப்பிவிட்டார். இந்தநிலையில் கார் பாண்டுப் பகுதியில் சென்றபோது, இளம்பெண் உதவி கேட்டு அலறினார். உடனே அங்கிருந்தவர்கள் காரை மடக்கி இளம்பெண்ணை மீட்டனர். பின்னர் அவர் சம்பவம் குறித்து பாண்டுப் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் இந்த வழக்கை செம்பூர் ஆர்.சி.எப். போலீஸ் நிலையத்திற்கு மாற்றினர்.

அதன்பேரில் செம்பூர் ஆர்.சி.எப். போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணையும், அவரது தாயையும் கடத்திய 2 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் செம்பூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்