மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்
மாமல்லபுரத்தில் நேற்று கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
மாமல்லபுரம்,
மாமல்லபுரத்தில் நேற்று காற்றுடன் பலத்த மழை பெய்தது. கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மேலும் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டதால் மீனவர்கள் தங்கள் மீன்பிடி வலைகள், படகு போன்றவற்றை பாதுகாப்பான இடங்களில் வைத்தனர்.
மாமல்லபுரத்தில் மழை நீர் தேங்கிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரன் தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் பொக்லைன் எந்திரம் உதவியுடன் மழை நீரை வெளியேற்றினர். பலத்த மழையால் மாமல்லபுரத்தில் நேற்று சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக காணப்பட்டது.