ரூ.2 ஆயிரம் கோடி செலவில் சேலத்தில் 3 லட்சம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் திட்டம் - காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
சேலத்தில் ரூ.2 ஆயிரம் கோடி செலவில் 3 லட்சம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் நாளை (வியாழக்கிழமை) தொடங்கி வைக்கிறார்.
சேலம்,
சேலத்தில் நேற்று இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவன தென் மண்டல பொது மேலாளர் சபீதாநட்ராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் நாடு முழுவதும் இயற்கை எரிவாயு உபயோக பயன்பாட்டை மத்திய அரசு விரிவுப்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் சேலம், கோவை நகரங்களுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் சார்பில் இயற்கை எரிவாயு வழங்க உள்ளோம். நாளை (வியாழக்கிழமை) 129 மாவட்டங்களில் இயற்கை எரிவாயு பயன்பாடு திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
சேலத்திலும் இயற்கை எரிவாயு திட்டம் நாளை தொடங்கப்பட உள்ளது. இதற்கான விழா சேலம் சோனா கல்லூரி வளாகத்தில் நடக்கிறது. இதில் பன்னீர்செல்வம் எம்.பி., வெங்கடாசலம் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொள்கின்றனர். சேலத்துக்கு கேரள மாநிலம் கொச்சி, சென்னை எண்ணூர் ஆகிய சேமிப்பு கிடங்கில் இருந்து குழாய் மூலம் இயற்கை எரிவாயு கொண்டு வரப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் தற்போது 9.8 லட்சம் சமையல் கியாஸ் சிலிண்டர் இணைப்புகள் உள்ளன. இதில் சேலம் மாநகரில் 4.3 லட்சம் இணைப்புகள் இருக்கிறது. முதல் கட்டமாக சேலம் மாவட்டம் முழுவதும் 3 லட்சம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இணைப்பு வழங்கப்படும் வீடுகளில் தனியாக மீட்டர் பொருத்தப்படும். இதற்காக குழாய்கள் அமைக்கும் பணி முடிந்ததும் 2 ஆண்டுகளில் இந்த திட்டம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். 8 ஆண்டுகளில் முழு இலக்கு எட்டப்படும். தொழிற்சாலை, ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள், கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் இயற்கை எரிவாயு வழங்கப்படும். ரூ.2 ஆயிரம் கோடியில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சேலம் மாவட்டத்தில் 158 இயற்கை எரிவாயு மையங்கள் அமைக்க உள்ளோம்.
இயற்கை எரிவாயு கொண்டு வருவதற்கு, குழாய் அமைப்பதற்காக நிலத்தடியில் குழி தோண்டும் பணி ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. இயற்கை எரிவாயு பயன்படுத்தினால் செலவு குறைவு. தற்போது பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டர்களை விட, இயற்கை எரிவாயுவை பயன்படுத்தினால் 40 சதவீதம் செலவு குறையும். அதே போன்று பெட்ரோலை விட 60 சதவீதமும், டீசலை விட 40 சதவீதமும் விலை குறைவு ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது சென்னை மண்டல பொது மேலாளர் ராஜுகுல்கர்னி, சேலம் மண்டல துணை பொது மேலாளர் பழனி குமார் ஆகியோர் உடனிருந்தனர்.