பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தற்கொலை வழக்கு - சேலத்துக்கு திடீர் மாற்றம்
சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் அங்கமுத்து தற்கொலை வழக்கு சேலத்துக்கு திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது.;
சேலம்,
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள தோப்புபாளையம் பகுதியை சேர்ந்தவர் அங்கமுத்து(வயது 54). இவர் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18-ந் தேதி வீட்டில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கு யார் காரணம்? என்பது குறித்து அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார். இது குறித்து பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தினர். இதனிடையே அங்கமுத்து மனைவி விஜயலட்சுமி, தனது கணவர் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக டி.ஜி.பி.க்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பினார்.
இதையடுத்து டி.ஜி.பி. உத்தரவின் பேரில், அங்கமுத்துவை தற்கொலைக்கு தூண்டியதாக சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதன் மற்றும் மணிவண்ணன், நெல்சன், குழந்தைவேல், ராஜமாணிக்கம், கிருஷ்ணகுமார், அன்பழகன் ஆகிய 7 பேர் மீது பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், பெரியார் பல்கலைக்கழகம் சேலத்தில் இருப்பதால் இந்த வழக்கை பெருந்துறை போலீஸ் நிலையத்தில் இருந்து சேலம் மத்திய குற்றப்பிரிவுக்கு திடீரென மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு சேலத்துக்கு மாற்றப்பட்டு, போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.