சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது ரூ.20 ஆயிரம் கோடிக்கு மானிய கோரிக்கை தாக்கல்

சட்டசபை கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. ரூ.20 ஆயிரம் கோடிக்கு மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.;

Update:2018-11-20 06:00 IST
மும்பை,

மராட்டிய சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று சபை தொடங்கியதும் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு மரியாதை செலுத்தும் விதமாக இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அவருக்கு உறுப்பினர்கள் புகழஞ்சலி செலுத்தினர்.

மறைந்த முன்னாள் மந்திரிகள் அனந்த்ராவ் தேவ்கடே, வசந்த்ராவ் தோட்ரே மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. மதன்ராவ் கெய்க்வாட் உள்ளிட்டவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ரூ.20 ஆயிரத்து 326 கோடிக்கு மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. மானிய கோரிக்கையில், வறட்சி பாதித்த பகுதிகளில் நிவாரணம் வழங்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. இதற்காக ரூ.2,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் சுகாதார திட்டத்தை செயல்படுத்த ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலை நடத்த ரூ.26 கோடி வழங்கப்பட்டுள்ளது. மராத்தா இடஒதுக்கீட்டிற்காக கூடுதலாக ரூ.500 கோடி ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதேபோல் பீமா-கோரேகாவ் வன்முறை விசாரணைக்காக ரூ.42 கோடியும், தியாகிகள் நினைவு சின்னத்தை பராமரிக்க ரூ.12 கோடியும் மானிய கோரிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்