புனே விமான நிலையத்தில் ரூ.90½ லட்சம் தங்கத்துடன் இளம்பெண் பிடிபட்டார் மும்பையை சேர்ந்தவர்
துபாயில் இருந்து புனே வந்த விமானத்தில் ரூ.90½ லட்சம் தங்கம் கடத்தி வந்த மும்பையை சேர்ந்த இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
புனே,
புனே விமான நிலையத்தில் நேற்றுமுன்தினம் துபாயில் இருந்து வந்த விமானம் ஒன்று தரையிறங்கியது. அந்த விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது இளம்பெண் ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பெண்ணை பிடித்து பெண் அதிகாரிகள் மூலம் சோதனை நடத்தினர்.
அப்போது, அவர் இடுப்பு பகுதியில் ஆடைக்குள் 4 பாலித்தீன் பைகளை மறைத்து வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர். அந்த பாலித்தீன் பைகளை கைப்பற்றி பிரித்து பார்த்தனர். அதில், 2¾ கிலோ எடை கொண்ட தங்கம் இருந்தது. இதன் மதிப்பு ரூ.90 லட்சத்து 44 ஆயிரம் ஆகும்.
இதையடுத்து அதிகாரிகள் அந்த தங்கத்தை அதிரடியாக பறிமுதல் செய்தனர். மேலும் அந்த இளம்பெண்ணை விமான நிலைய போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த இளம்பெண்ணை கைது செய்து விசாரித்தனர். இதில், அவர் மும்பையை சேர்ந்த தந்தாஸ் ஜன்கா ஜான்(வயது25) என்பது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.