தலைமை செயலகம் எதிரே காட்சி பொருளாக இருக்கும் கழிப்பிடம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சென்னை தலைமை செயலகம் எதிரே விசாலமான வகையில் வாகனங்கள் நிறுத்தும் இடம் உள்ளது. முதல்-அமைச்சர் தனிப்பிரிவு, அமைச்சர்களிடம் கோரிக்கை மனுக்கள் அளிக்க வரும் பொதுமக்களுடைய வாகனங்கள் இங்கு தான் நிறுத்தப்படுகின்றன.

Update: 2018-11-19 22:15 GMT
சென்னை,

கார்கள், இருசக்கர வாகனங்களில் தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். வாகனம் நிறுத்தும் வளாகத்தில் ஆண், பெண் என இருபாலரும் பயன்படுத்தக் கூடிய வகையில் தனித்தனி கழிப்பிடம் அமைக்கப்பட்டது.

மக்கள் பயன்படுத்தி வந்த இந்த கழிப்பறை கடந்த சில மாதங்களாக மூடியே கிடக்கிறது. தற்போது அந்த இடம் புதர் மண்டி பாழடைந்த கட்டிடம் போன்று காட்சி அளிக்கிறது.

இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் இயற்கை உபாதைகள் கழிப்பதற்கு சிரமம் அடைந்துள்ளனர். மேலும் சுகாதாரமற்ற முறையில் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மூடிக் இருக்கும் அந்த கழிப்பறையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்