உடையார்பாளையம் அருகே தனியார் குடிநீர் சுத்திகரிப்பு ஆலைக்கு ‘சீல்’
உடையார்பாளையம் அருகே உள்ள தத்தனூரில் ஒரு தனியார் குடிநீர் சுத்திகரிப்பு ஆலை இயங்கி வந்தது.;
உடையார்பாளையம்,
உடையார்பாளையம் அருகே உள்ள தத்தனூரில் ஒரு தனியார் குடிநீர் சுத்திகரிப்பு ஆலை இயங்கி வந்தது. இந்த ஆலை உரிமம் இன்றி இயங்கி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் மாநில உணவு பாதுகாப்பு துறை ஆணையர் அமுதா உத்தரவுப்படி, அரியலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் நியமன அலுவலர் சவுமியாசுந்தரி, ஜெயங்கொண்டம் நகரம் மற்றும் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சசிகுமார் ஆகியோர் அந்த குடிநீர் ஆலைக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். சோதனையில், இந்த ஆலை இந்திய தர நிறுவனத்தின் உரிமம் (பி.ஐ.எஸ்.), உணவு பாதுகாப்பு துறையால் வழங்கப்படும் (எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.) உரிமம் மற்றும் நிலத்தடி நீர் எடுப்பதற்கான ஆட்சேபணையின்மை சான்றிதழ் ஆகிய முக்கிய உரிமங்கள் இன்றி செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அதிகாரிகள் அந்த ஆலைக்கு ‘சீல்’ வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.