கியாஸ் நிறுவனத்தில் அதிகாரி வேலைகள்

கெயில் கியாஸ் நிறுவனத்தில் அதிகாரி பணிக்கு 160 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விவரம் வருமாறு:

Update: 2018-11-19 09:00 GMT
இந்திய எரிவாயு ஆணைய நிறுவனம் சுருக்கமாக கெயில் (GAIL) என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் ஜூனியர் என்ஜினீயர், போர்மேன், ஜூனியர் கெமிஸ்ட், ஜூனியர் சூப்பிரண்டன்ட், டெக்னீசியன் உள்ளிட்ட பணியிடங் களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 160 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

பணியிடங்கள் வாரியான காலியிட விவரம் : போர்மேன் - 55 பேர், டெக்னீசியன் - 51, மார்க்கெட்டிங் அசிஸ்டன்ட் - 21, அக்கவுண்ட்ஸ் அசிஸ்டன்ட் -10 , ஜூனியர் சூப்பிரண்டன்ட் - 7, ஜூனியர் கெமிஸ்ட் - 10 பேர், ஜூனியர் என்ஜினீயர் - 3, அசிஸ்டன்ட் - 3.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை பார்ப்போம்...

வயது வரம்பு

ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. 30-11-2018-ந் தேதியில், 26 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

கல்வித்தகுதி

டிப்ளமோ என்ஜினீயர், இளநிலை பட்டப்படிப்பு, முதுநிலை வேதியியல் படிப்பு, 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. படித்தவர்கள் ஆகியோருக்கு பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கு சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ரூ.50 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 30-11-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும்.

இது பற்றிய விரிவான விவரங்களை http://gailonline.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

மேலும் செய்திகள்