மராட்டிய சட்டசபை இன்று கூடுகிறது : பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
மராட்டிய சட்டசபை கூட்டம் இன்று கூடுகிறது. பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
மும்பை,
மராட்டிய சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் மும்பையில் இன்று(திங்கட்கிழமை) தொடங்குகிறது. வரும் 30-ந்தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறுகிறது.
மராத்தா மக்களின் சமூக மற்றும் பொருளாதார நிலை குறித்த அறிக்கையை பிற்படுத்தப்பட்டோர் கமிட்டி தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த கூட்டத்தொடர் தொடங்குவதால் நீண்டகாலமாக நீடித்துவரும் மராத்தா இட ஒதுக்கீடு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் தங்கர், முஸ்லிம் மக்களுக்கு வழங்க வேண்டிய இடஒதுக்கீடு, விவசாயிகள் தற்கொலை, மும்பை வளர்ச்சி திட்டம் உள்பட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் சட்டசபை அமைதியை வழக்கம்போல சீர்குலைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டும் அல்லாமல் மாநிலத்தில் நிலவும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு மற்றும் அவ்னி புலி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் என பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
அடுத்த ஆண்டு சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் இந்த சட்டசபை கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதற்கிடையே முக்கிய பிரச்சினைகளில் இருந்து தப்பித்து கொள்ளும் நோக்கில் சட்டசபை கூட்டத்தை குறுகிய காலத்துக்குள் முடித்து கொள்ள அரசு திட்டமிட்டுள்ளதாக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் விகே பாட்டீல் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தநிலையில், சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்குவதையொட்டி நேற்று முதல்-மந்திரியின் விருந்தினர் மாளிகையில் நடந்த தேநீர் விருந்தை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.
இந்த சட்டசபை கூட்டத்தொடர் 2 வாரங்கள் மட்டுமே நீடிப்பது குறிப்பிடத்தக்கது.