65-வது கூட்டுறவு வாரவிழா 706 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

65-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நிகழ்ச்சி திருவள்ளூரில் நடைபெற்றது. இதற்கு தமிழ் ஆட்சிமொழி, கலை பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜன், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.

Update: 2018-11-18 23:00 GMT
திருவள்ளூர்,

அப்போது அவர்கள் மாவட்ட அளவில் 20 சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு நினைவு பரிசுகள் மற்றும் ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற 15 மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி மகளிர் சுயஉதவிக்குழு கடன், சிறுவணிக கடன், பொருளாதார மேம்பாட்டுக்கடன் என 706 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 70 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தமிழ்ச்செல்வி, வேணுகோபால் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சிறுணியம் பலராமன், பி.எம்.நரசிம்மன், வி.ஜி.ராஜேந்திரன், கூட்டுறவு சரக துணை பதிவாளர்கள் பாலாஜி, ரமேஷ், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் சாமுண்டீஸ்வரி, கூட்டுறவு சங்க இயக்குனர்கள் சுரேஷ், ரகுராமன், எழிலரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்