உலக மூலநோய் தினத்தை முன்னிட்டு இந்திரா நர்சிங் ஹோமில் இலவச அறுவை சிகிச்சை முகாம் ஏராளமானோருக்கு பரிசோதனை
உலக மூலநோய் தினத்தை முன்னிட்டு வேலூர் இந்திரா நர்சிங் ஹோமில் நடந்த இலவச அறுவை சிகிச்சை முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.
வேலூர்,
உலக மூலநோய் தினத்தை முன்னிட்டு வேலூர் இந்திரா நர்சிங் ஹோமில் 21-ம் ஆண்டாக இலவச அறுவை சிகிச்சை முகாம் நேற்று நடந்தது. காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம் நடைபெற்றது. இதில், மூலத்திற்கு லேசர் அறுவை சிகிச்சை, பொது அறுவை சிகிச்சை மேற்கொள்ள பொதுமக்களுக்கு தலைமை டாக்டர் பி.சங்கர் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினார்.
சிறுநீரக கோளாறுகளுக்கு டாக்டர் முகமது முசாபர், கர்ப்பப்பை கோளாறுகளுக்கு டாக்டர் லதாலஷ்மி ஆகியோர் இலவச ஆலோசனை வழங்கினர். மேலும் இதய பிரச்சினைகளுக்கு டாக்டர் முத்துக்குமரன், முதுகு தண்டு பிரச்சினைகளுக்கு டாக்டர் ரமணகுமார், கதிர்வீச்சு மற்றும் புற்று நோய்களுக்கு டாக்டர் வேலவன் ஆகியோர் கலந்து கொண்டு நோயாளிகளை பரிசோதனை செய்து இலவச ஆலோசனை வழங்கினர்.
முகாமில் டாக்டர்கள் கரண், சிவரஞ்சனி, சாலமன் ஆகியோரும் பரிசோதனை செய்து பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளித்தனர். மேல் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழும், அதில் அல்லாதவர்களுக்கு சலுகை கட்டணத்திலும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த மருத்துவ முகாமில் வேலூர், திருவண்ணாமலை, சேலம், கடலூர், கிருஷ்ணகிரி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயன் அடைந்தனர் என இந்திரா நர்சிங் ஹோம் தலைமை டாக்டர் பி.சங்கர் தெரிவித்தார்.