‘கஜா’ புயலால் பாதிப்பு: கடலூர் துறைமுகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் ஆய்வு
‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் துறைமுகத்தை அமைச்சர் ஜெயக்குமார் ஆய்வு செய்தார். அப்போது அவர் சேதமடைந்த படகுகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என கூறினார்.;
கடலூர் முதுநகர்,
தமிழகத்தில் ‘கஜா’ புயல் பாதித்த மாவட்டங்களில் சேதங்கள் குறித்து நேரில் ஆய்வு செய்யுமாறு அமைச்சர்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார். அதன்பேரில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ‘கஜா’ புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக கடலூருக்கு வந்தார். கடலூர் மீன்பிடி துறைமுக பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த பின் அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை 49 மீனவ கிராமங்கள் உள்ளன. ‘கஜா’ புயல் குறித்து 11-ந்தேதி வானிலை மையம் தெரிவித்தவுடன் முதல்-அமைச்சர் இருகூட்டங்கள் நடத்தி தகுந்த அறிவுரைகள் கூறியதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகங்கள் முழுமையாக முடுக்கி விடப்பட்டன. இதன்காரணமாக கடந்த காலங்களை ஒப்பிடும் போது தற்போது உயிர் சேதம் பெருமளவில் தவிர்க்கப்பட்டது. இதனை எதிர்க்கட்சிகள் மற்றும் பலர் அ.தி.மு.க. அரசை பாராட்டுகிறார்கள்.
இந்த புயலால் ஒரு மீனவர் கூட நடுக்கடலில் தத்தளிக்கவில்லை. 100 சதவீத உயிருக்கு உத்தரவாதத்தை ஏற்படுத்தி தந்தது அ.தி.மு.க. அரசு. புயல் கரையை நோக்கி வீசியதன் காரணமாக படகுகள் ஒன்றோடு ஒன்று மோதியும், தண்ணீரில் மூழ்கியும் சேதமடைந்தன.
பகுதி வாரியாகவும், முழுமையாகவும் சேதமடைந்த படகுகளை கணக்கெடுக்கும் பணி மீனவ கிராமங்களில் நடைபெற்று வருகிறது. இதற்காக மீன்வளத்துறை துணை இயக்குனர் தலைமையில் 6 குழுக்கள் அமைத்து அதற்கு கீழ் 22 துணை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 100 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறையினருடன் இணைந்து கணக்கெடுத்து அறிக்கை தர உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை ஏற்று கணக்கெடுக்கும் பணியை அவர்கள் தொடங்கி உள்ளனர். ஒரு சில தினங்களில் அறிக்கை அளிக்கும் பட்சத்தில் சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் கொடுப்பதற்கான நடவடிக்கையை முதல்-அமைச்சர் விரைவில் எடுப்பார்.
கடலூர் துறைமுகத்தை பொறுத்தவரை அதிகமாக விசைப்படகுகள் இருக்கிற காரணத்தால் இடநெருக்கடி உள்ளது. எனவே ரூ.100 கோடி மதிப்பில் கடலூர் முதுநகரில் மீன்பிடி துறைமுகம் 2019-20-ம் ஆண்டில் அமைக்கப்படும். கடலூரில் சுருக்கு மடிவலைகளை பயன்படுத்தியதால் மீனவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டு, உயிரிழப்பும் ஏற்பட்டிருக்கிறது. கடல் வளம் பாதுகாக்கப்படவேண்டும். மீன்கள் நாளைக்கும், அடுத்த தலைமுறைக்கும் இருக்க வேண்டும். இந்தியா முழுவதும் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலையை தமிழகத்திலும் பயன்படுத்தக்கூடாது.
கடந்த 2015-ம் ஆண்டு பெய்த கனமழையால் சேதம் அதிகமாக இருந்தது. அப்போது மத்திய அரசிடம் கேட்ட நிதி கிடைக்கவில்லை. பொதுவாக மத்திய அரசிடம் 100 ரூபாய் கேட்டால் 50 ரூபாய் கொடுப்பார்கள். அதனால் நாங்கள் கேட்பதை விடமாட்டோம். ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ‘கஜா’ புயல் பாதிப்பு தொடர்பான அறிக்கையை பெற்று, மொத்தமாக தமிழக அரசின் சார்பில் மத்திய அரசிடம் அளித்து, போதிய நிதி பெறப்படும். தமிழக மக்களின் நலன் காக்க தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது கடலூர் கலெக்டர் அன்புசெல்வன், போலீஸ் சூப்பிரண்டு சரவணன், சப்-கலெக்டர் சரயூ, மீன்வளத்துறை இயக்குனர் சமீரான், மீன்வளத்துறை துணை இயக்குனர் ரேணுகா, உதவி இயக்குனர் கங்காதரன், ஆய்வாளர் மனோகரன், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ரவிச்சந்திரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.