இடைத்தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் - சாத்தூர் ராமச்சந்திரன்
இடைத்தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என்று சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
சாத்தூர்,
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் மற்றும் சாத்தூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக சாத்தூரில் தி.மு.க.சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. தெற்கு மாவட்ட செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
தேர்தல் பொறுப்பாளர்கள் முன்னாள் அமைச்சர் பூங்கோதை, முன்னாள் எம்.பி. கம்பம் செல்வேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது:–
கடந்த முறை சாத்தூரில் வெற்றி பெற்றவர்கள் இப்போது 2 பிரிவுகளாக உள்ளனர். இவர்களில் யார் பெரியவர் என்ற போட்டி நடைபெறுகிறது. அதிக ஓட்டுவாங்குவர் அ.தி.மு.க. சின்னத்தை பெற்றுவிடலாம் என போட்டி நடைபெறுகிறது. ஆனால் கடந்த தேர்தலில் மக்கள்நல கூட்டனி சார்பாக ம.தி.மு.க. வாங்கிய ஒட்டு 25 ஆயிரம் ஆகும். அது இப்போது நம் பக்கம் இருக்கிறது.ஆகவே 20ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. தான் சாத்தூர் தொகுதியில் வெற்றிபெறும்.
ஆட்சி மாற்றம்
நமக்கு இருக்கும் வாக்கு சதவீதத்தை பார்க்கும்போது 20 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம். இடைத்தேர்தலுக்கு பிறகு ஆட்சி மாற்றம் வரும். இந்த ஆட்சியை மாற்றி ஸ்டாலினை முதல்–அமைச்சர் ஆக்குவோம். இப்போது எதிர்க்கட்சியாக இருக்கும் நாம் இந்த தேர்தலுக்கு பின்னர் ஆளும்கட்சியாக மாறுவோம். அதற்கு கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பாடுபடவேண்டும்.
இவ்வாறு பேசினார். கூட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ., ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கபாண்டியன், நகர செயலாளர் குருசாமி, ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், சரவணன், கோசுகுண்டு சீனிவாசன், கடற்கரைராஜ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சூரியநாராயணன், கலை இலக்கிய பகுத்தறிவு அணி அமைப்பாளர் அசோக் உள்பட பலர் கல்ந்து கொண்டர்கள்.