ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சல் வார்டில் 24 பேருக்கு சிகிச்சை
ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சல் வார்டில் 24 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற வருவோரின் கூட்டமும் கட்டுக்கடங்காமல் இருந்து வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்படுவோரில் பலர் பன்றிக்காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். அவர்கள் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி பன்றிக்காய்ச்சல் சிறப்பு வார்டிலும் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
குமரி மாவட்டத்தில் இதுவரை பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 பேர் இறந்துள்ளனர். ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி பன்றிக்காய்ச்சல் சிறப்பு வார்டில் நேற்றைய நிலவரப்படி 10 பெண்கள், 5 ஆண்கள், 5 பெண் குழந்தைகள், 4 ஆண் குழந்தைகள் என மொத்தம் 24 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் ஒரு ஆணும், பெண்ணும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.