ஆயுஸ்மான்-சுகாதார கர்நாடக திட்டத்தில் ரூ.5 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை : மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி
ஆயுஸ்மான்-சுகாதார கர்நாடக திட்டத்தில் ரூ.5 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை பெற முடியும் என்றும், இதற்காக மத்திய அரசுடன், கர்நாடக மாநில அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது என்றும் மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.
பெங்களூரு,
நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மத்திய அரசின் ஆயுஸ்மான் மற்றும் கர்நாடக அரசின் சுகாதார கர்நாடக மருத்துவ காப்பீட்டு திட்டம் கூட்டாக செயல்படுத்தப்படுகிறது. இதற்காக மத்திய அரசுடன் மாநில அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இந்த திட்டத்தில் வறுமை கோட்டுக்கு கீழ்(பி.பி.எல்.) உள்ளோருக்கான குடும்ப அட்டையை வைத்திருப்பவர்கள், ஒருவர் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை பெற முடியும். வறுமை கோட்டுக்கு மேல் (ஏ.பி.எல்.) உள்ளோருக்கான குடும்ப அட்டையை வைத்திருப்பவர்கள் ஆண்டுக்கு ரூ.1½ லட்சம் வரை மருத்துவ சிகிச்சை பெற அனுமதிக்கப்படுகிறது.
இந்த திட்டம் கடந்த அக்டோபர் மாதம் 30-ந் தேதி முதல் அமலுக்கு வந்துவிட்டது. இந்த திட்டத்தின் மூலம் கர்நாடகத்தில் 4.40 கோடி மக்கள் பயன் பெறுகிறார்கள். கர்நாடகத்தில் 385 அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் 531 தனியார் மருத்துவமனைகளில் இந்த திட்டத்தின் மூலம் சிகிச்சை பெற முடியும்.
மேலும் மாநிலத்தின் எல்லை பகுதியில் உள்ள மக்கள் பயன் பெறும் வகையில் அண்டை மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெறவும் அனுமதி வழங்கப்படுகிறது. இதற்காக 36 தனியார் மருத்துவமனைகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் நிதி வழங்குகிறது.
ஏற்கனவே இருந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 1,516 நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது இதில் புதிதாக 630 நோய்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் 169 அவசர சிகிச்சை நோய்களும் இடம் பெற்றுள்ளன. மொத்தத்தில் 2,146 நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை வசதி இல்லாதபோது, தனியார் மருத்துவமனைக்கு நோயாளிகள் அனுப்பி வைக்கப்படுவார்கள். இந்த திட்டத்தில் கடந்த 15 நாட்களில் 2,391 பேர் அறுவை சிகிச்சை பெற்றுள்ளனர். குடும்ப அட்டை இல்லை என்றாலும், சிகிச்சை பெற முடியும். ஆனால் சிகிச்சை பெறும்போது, அந்த அட்ைடயை பெற்று வந்து கொடுக்க வேண்டும்.
இந்த திட்டம் குறித்து வருகிற 20-ந் தேதி அரசு ஆஸ்பத்்திரி டாக்டர்களுடனும், 27-ந் தேதி தனியார் மருத்துவமனை டாக்டர்களுடனும் ஆலோசனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு டி.கே.சிவக் குமார் கூறினார்.