கஜா புயல் எதிரொலி: புதுக்கோட்டை மாவட்டத்தில் மீட்பு பணிக்கு 2 ஆயிரம் பேர் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை
கஜா புயல் எதிரொலியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மீட்பு பணியில் 2 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்றும் (வெள்ளிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.;
கோட்டைப்பட்டினம்,
கஜா புயல் காரணமாக புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதியில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இந்த ஏற்பாடுகளை பார்வையிட புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சுற்றுச்சூழல், வனத்துறை அரசு முதன்மை செயலாளருமான சம்பு கல்லோலிக்கர், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் ஆகியோர் கடலோர பகுதிக்கு சென்றனர்.
அவர்கள் கட்டுமாவடி பேரிடர் மையத்தை ஆய்வு செய்தனர். பின்னர் அங்கிருந்து கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திற்கு சென்று, அங்கு கடல் உள்வாங்கிய பகுதியை ஆய்வு செய்து, மீனவ சங்க நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதேபோல் பாலக்குடி பேரிடர் மையம், மீமிசல் பேரிடர் மையத்தையும் ஆய்வு செய்தனர்.
அப்போது சுற்றுச்சூழல், வனத்துறை அரசு முதன்மை செயலாளர் சம்பு கல்லோலிக்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கஜா புயலை சமாளிக்க அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. உணவு, தங்கும் இடம் அனைத்துமே தயார் நிலையில் உள்ளன. மீட்பு பணியில் சுமார் 2 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புக்குழு வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர். பொதுமக்கள் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள வசதியாக தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ உதவிகள், மின்சாரம் இல்லையென்றால் ஜெனரேட்டர் வசதி போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் கூறியதாவது:-
புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதியில் அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் 586 பேர் தயார் நிலையில் உள்ளனர். மேலும், 67 புயல் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேவைக்கு ஏற்ப இதன் எண்ணிக்கைகள் அதிகரிக்கப்படும். மாவட்ட அளவில் 12 கண்காணிப்புக் குழுக்களும், ஒன்றிய அளவில் 13 குழுக்களும் தயார் நிலையில் உள்ளன. தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். பாதிப்புகள் அதிகமான பகுதிகளில் வாக்கி டாக்கி பயன்படுத்தும் காவலர்களை நிறுத்தி அவர்கள் மூலம் தகவல் பெறப்பட்டு அதற்கேற்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தொலைத்தொடர்பு துண்டிக்கப்படாத வகையில் அனைத்து செல்போன் கோபுரங்களையும் அந்தந்த நிறுவனத்தின் மூலம் கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கஜா புயல் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதேபோல் இன்றும் (வெள்ளிக்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் முழு நேரமும் மருத்துவர்கள் இருந்து பணியாற்றுவார்கள். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். அரிசி, மண்எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களை கூடுதலாக இருப்பில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையில் மின்கம்பங்கள் சேதம் ஏற்பட்டால் வெளி மாவட்டங்களில் இருந்து கூடுதலான மின்கம்பங்களை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். புயல் பாதிப்புகள் குறித்து 1070 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ, 04322-222207 எண்ணிலோ புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.