கிராமப்புறங்களுக்கு குடிநீர் வழங்கும் ‘ஜலதாரே’ திட்டம் குறித்து, உயர் அதிகாரிகளுடன் முதல்-மந்திரி குமாரசாமி ஆலோசனை

கிராமப்புறங்களுக்கு குடிநீர் வழங்கும் ‘ஜலதாரே’ திட்டம் குறித்து, உயர் அதிகாரிகளுடன் முதல்-மந்திரி குமாரசாமி ஆலோசனை நடத்தினார்.

Update: 2018-11-14 23:15 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் கிராமப்புறங்களுக்கு குடிநீர் வழங்க ‘ஜலதாரே’ திட்டம் அமல்படுத்தப்படும் என்று கர்நாடக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுடன் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று பெங்களூருவில் ஆலோசனை நடத்தினார்.

இந்த திட்டத்தில் பெங்களூருவை தவிர்த்து மற்ற நகரங்களை சேர்த்துக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் ஆலோசனை கூறினர். இதையடுத்து நகர வளர்ச்சி மற்றும் கிராம வளர்ச்சித்துறை அதிகாரிகள் இதுகுறித்து விவாதித்து திட்ட அறிக்கையை தயாரித்து வழங்கும்படி குமாரசாமி உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில் கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரி கிருஷ்ண பைரேகவுடா, நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார், தலைமை செயலாளர் விஜயபாஸ்கர் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்