திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்த வேண்டும் - ஜி.கே.வாசன் பேட்டி
காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்த வேண்டும் என்று திருப்பூரில் ஜி.கே.வாசன் கூறினார்.
திருப்பூர்,
திருப்பூர் கணியாம்பூண்டியில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நேற்று திருப்பூர் வந்தார். அவருக்கு புஷ்பா ரவுண்டானா பகுதியில் வைத்து மாநகர் மாவட்டம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநகர் மாவட்ட தலைவர் ரவிக் குமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் மணமக்களை வாழ்த்தினார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த தினத்தை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இது குழந்தைகள் தினமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக படிக்கின்ற மாணவிகளுக்கு எதிராக பாலியல் தொல்லைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது சமூக அநீதி. இது கண்டிக்கத்தக்கது. இதை தடுக்க கடும் சட்டம் நிறைவேற்றி குற்றம் செய்பவர்களை குறுகிய காலத்திற்குள் தண்டனை கிடைக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும். திருப்பூரில் அடிப்படை சுகாதாரம் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. சாலைகள், சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்படவில்லை, குப்பைகள் அள்ளப்படவில்லை, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூரில் பரவிவரும் டெங்கு, பன்றி காய்ச்சலால் பலர் உயிரிழந்து வருகின்றனர். அந்த வகையில் திருப்பூர் ஆஸ்பத்திரியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கூடுதல் படுக்கை வசதிகளும், அதிக எண்ணிக்கையிலான டாக்டர்களையும், செவிலியர்களையும் பணிக்கு நியமிக்க வேண்டும்.
அரசு ஆஸ்பத்திரிகளில், காய்ச்சல் தொடர்பான அனைத்து சோதனைகளையும் இலவசமாக செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இலங்கையில் கோர்ட்டு மூலம் சிறிசேனா-ராஜபக்சே கூட்டு சதி முறியடிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு அங்கிருக்கும் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும். கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும். டெல்டா மாவட்டங்களில் மிகமுக்கியமாக கவனம் செலுத்தி புயலினால் ஏற்படும் அசம்பாவிதங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி நீரில் சாயக்கழிவு கலப்பு காரணமாக மேட்டூர் அணையில் பச்சை நிறத்தில் வெள்ளம் வருகிறது. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசின் பணமதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளால் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது போல பல திட்டங்கள் பயனில்லாமலே இருந்து வருகிறது. மக்களின் நம்பிக்கையை உறுதிபடுத்தும் அரசாக இருக்க வேண்டும். தொழில்துறையினர் தொடர்ந்து சிரமங்களை சந்தித்து வருவதால் சாயக்கழிவு சுத்திகரிப்பு நிலையங்களுக்கு உள்ள 12 சதவீதம் ஜி.எஸ்.டி. வரியை நீக்க வேண்டும். வருகிற 25-ந்தேதி கட்சியின் 5-ம் ஆண்டு தொடக்கவிழா அரியலூரில் நடைபெறுகிறது. இதில் ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர். நடைபெற உள்ள தேர்தல் நியாயமான முறையில் நடைபெறவேண்டும். தொண்டர்கள் எண்ணத்தின் படியே கூட்டணி அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.