மணல் கடத்தியவர் கைது; லாரி பறிமுதல்

மணல் கடத்த பயன்படுத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2018-11-14 22:30 GMT
விக்கிரமங்கலம், 

விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்கண்ணன் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஸ்ரீபுரந்தான்-சாத்தம்பாடி சாலை வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் பெரியவளையம் கிராமத்தை சேர்ந்த ஜெகன்ராஜ் (வயது 30) என்பவர் ஸ்ரீபுரந்தான் கொள்ளிடம் ஆற்று படுகை பகுதியில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து ஜெகன்ராஜை கைது செய்தனர். மணல் கடத்த பயன்படுத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்