பாளையங்கோட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி ஏராளமானோர் பங்கேற்பு

பாளையங்கோட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் ஏராளமானோர் ப

Update: 2018-11-14 22:00 GMT

நெல்லை, 

பாளையங்கோட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

விளையாட்டு போட்டி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. 

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாந்திகுளோரி எமரால்டு தலைமை தாங்கினார். கலெக்டர் ஷில்பா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விளையாட்டு போட்டியை தொடங்கிவைத்தார். இதில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார்.

இதையொட்டி புஷ்பலதா மனவளர்ச்சி குன்றிய பள்ளி மாணவ–மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விளையாட்டு போட்டியில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 562 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

குண்டு எறிதல்

போட்டியில் கால் ஊனமுற்றோருக்கு வீல் சேரில் அமர்ந்து செல்கின்ற 50 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் சக்கர நாற்காலி போட்டி, கை ஊனமுற்றோருக்கு 100 மீட்டர் ஓட்டம், குள்ளமானோருக்கு 50 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல் ஆகிய போட்டியும் நடந்தது. பார்வையற்றோருக்கு 50 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. காதுகேளாதோருக்கு 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டமும், குண்டு எறிதல் போட்டியும் நடந்தது. மனவளர்ச்சி குன்றியோருக்கான போட்டிகளும் நடந்தன.

மேலும் செய்திகள்